உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

கண்

இளங்குமரனார் தமிழ்வளம் -31 31 ஓ

விநாயகர். இந்த விநாயகருக்கு இருபாலும் அமைந்த தூண்களில் இருக்கும் வீரர்களைப் பார்த்தாயா?

ஆம். எவ்வளவு நுணுக்கமாக எண்ணி இக் காவல் வீரர்களைப் படைத்துள்ளார்கள்! வியப்புக் கொள்ளை யாகத் தான் உள்ளது. அம்மை திரு வாயிலுக்குக் காவல் நங்கையர்; அப்பர் திரு வாயிலுக்குக் காவல் வீரர். இந்த யானைமுகப் பெருமான் கோயில் வாயிலுக்குயாளிகள்! யானைக் கடவுளுக்கு 'யாளி வீரரே' காவலாளர் என்று படைத்ததை எண்ணி மகிழலாம்.

பொன் : “சித்தம தாம்ஒரு தறியில் துவக்குறு

கண்

சித்திவி நாயகன் இசையைப் பழிச்சுதும்”

எனப் பாடி ஒரு வணக்கம் போட்டுவிட்டு வடக்கே நட. இங்கே 'குமரர்' எழுந்தருளியிருக்கின்றார். அவருக்கு முன்னே கிழக்கு நோக்கிச் சுக்கிரீவன் தூக்கிய வலக்கையொடு நிற்கின்றான். இடக்கையைத் தொடையில் வைத்து நிலம் நோக்கியுள்ளான். அவனுக்கு எதிரில் மேற்கு நோக்கி அவன் அண்ணன் வாலியும் எடுத்த வலக்கையுடன் நிற்கின்றான். ஆனால், இடக்கையால் தன் மார்பைச் சுட்டிக் காட்டுகின்றான் அவன் பார்வை விண்ணை நோக்கியுள்ளது.

இருவர் முகத்திலும் வேற்றுமையுள்ளது; வாலியின் முகம் கனத்தது; குட்டையானது. சுக்கிரீவன் முகம் ஒல்லியானது; நீண்டது. கால்கழல், காதுத் தொங்கல், வால்மணி எல்லாம் ஒப்பானவை! வாலி நெஞ்சைக் கவர்கின்றான்.

என்

பொன் : ஏன்? அவன் தன் நெஞ்சில் கை வைத்து இருக்கின் றானே அதனாலா? சுக்கிரீவா நீ செய்தது சரியா? நான் செய்தது சரியா? நமக்குள் புகுந்து இராமன் செய்தது சரியா? அவரவர் நெஞ்சில் கைவைத்துப் பார்த்தால்தான் உண்மை புலப்படும் என்கின்றானா?

கண்

ஏன்? இப்படியும் இருக்கலாமே! இங்கே வழிபட வரும் மக்களே இக் கோயிலுள் இருக்கும் இறைவன் நெஞ்சக் கோயிலுள்ளும் குடியிருக்கின்றான். இந்த நெஞ்சிலே வஞ்சமில்லாமல் இருங்கள் நெஞ்சைச் சுட்டிக்காட்டுகின்றான் என்று கூறலாமே!

என்று