உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

இளங்குமரனார் தமிழ்வளம் -31 31ஓ

பொன் : இந்த மூலையில் கிடக்கும் பெரும்பாறைக் கல் சந்தனம் தேய்க்கும் கல். இப்பொழுது கோயிலுக்குத் தேய்ப்பதற்கு இல்லை. 64 நாயன்மார்களுள் ஒருவரான மூர்த்திநாயனார் பயன்படுத்தியது. மூர்த்தி

நாயனார் செய்தி ர் செய்தி உனக்குத் தெரியுமே! அவர் இறைவனுக்கு நாள்தோறும் சந்தனக் காப்புச் சாத்துதலைக் கடமையாகக் கொண்டார். வேற்று மொழி வேந்தன் ஒருவன் மதுரையைப் பற்றிக் கொண்டு ஆட்சி புரிந்தான். மூர்த்தியார் திருப்பணிக்கு முட்டுப்பாடு வருமாறு சந்தனக் கட்டை கிடையாமல் செய்தான். சந்தனக் கட்டை கிடைக்க முட்டுப்பாடு ஆயினும், முட்டுக்கையைத் தேய்த்துத் தர முட்டுப்பாடு இல்லையே என்று தேய்த்து இறைவன் அருளுக்கு உரியவரானார். அரசும் ஏற்றுத் தொடர்ந்து

திருப்பணியும் புரிந்தார்.

கண் : நாம் இப்படித் தொண்டு செய்ய முடியுமா?

பொன் : நாம் இப்படித் தொண்டு செய்ய மூர்த்தியார் இல்லையே!

கண்

மூர்த்தி என்பது மூர்க்கத்தை (இறைவன் திருவுருவை) யுடையது; இறைவன் திருவுருவைத் தம்முள் கொண்டவர் மூர்த்தியார். அவர் திருத்தொண்டை நினைத்தால் என்ன புலப்படுகின்றது? இறைவன் தந்த உடல் இது. இறைவன் பணிக்கே இஃது உரிமை பூண்டது" என்பது மூர்த்தியார் கொள்கை. கொள்கையைக் கடைப்பிடித்தால் போதுமே! பொன் : குமரரை வழிபட்டு விட்டுத் திருவாயிலுக்குச் செல்வோம்.

கண் :

"மறங்குலவு வேலெடுத்த குமரவேள்

சேவடிகள் வணக்கம் செய்வோம்.

பொன் : இது பரஞ்சோதியார் வாக்குத் தானே!

கண்

கண்

க்

ஆம் திருவிளையாடலில் 'கறங்குதிரை' எனத் தொடங்குகின்றதே! அதன் கடைசி அடி இஃதாகும்.
பொன்னப்பா நாம் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். வாலி, சுக்கிரீவன், பாண்டவர்,பாஞ்சாலி இவர்க ளெல்லாம் இராமாயண, பாரதப் படைப்புக்கள்.