உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்

மதுரைக் கோயில் வரலாறு

59

தளிர்க்கையைப் பற்றும்போதும் தவவுருவாகி இருக்கத் தவத்தால் தானே முடியும்! அதனை அழகாகக் காட்டியிருக்கிறான் சிற்பி! இருந்ததை இருந்தபடி காட்டவல்ல இச்சிற்பி 'பெரிய ஆள்' தான்! பொன் : நாணிக்கோணி நிற்கும் நங்கையாம் தங்கையின் திருக்கையைக் கூத்த நம்பியின் திருக்கையோடு இணைத்து நீர்வார்க்கிறார் நெடுமால்! அவர் கையில் வைத்துள்ள நீர்க்கெண்டி பெரிதாகி அழகினைக் குறைத்து விடாவண்ணம் கருத்துடன் மிகச் சிறிதாக்கிப் படைத்தது பெருங்கலை நுட்பமாம்.

கண்

மணக்கோலத்தில் நிற்கும் அம்மைக்குப் பூட்டாத அணி என்ன? எங்கெங்கும் அணிகலங்கள்! மணவாளப் பிள்ளையின் அணிகலங்கள்தாம் எத்தனை! மணம் கொடுத்து மகிழும் அழகர்க்குப் பூட்டியுள்ள அணிகலங்கள் தாம் குறைவா?

பொன் : முடிமுதல் அடிவரை மூவருமே அழகுக்கு அழகு செய்யும் அணியாளராகவே விளங்குகின்றனர்.

கண் இந்நாள் திருமண நிகழ்ச்சிக்குப் போகும் கிழவன் கிழவியர் செய்யும் ஒப்பனையும், உடுத்தும் உடையும், பூட்டும் அணியும் பார்த்தால் போதுமே! சிற்பியும் இச் சமுதாய வாழ்வில் ஈடுபட்டிருந்தவர் தாமே!

பொன் : சிற்பி தாமறிந்த எந்தவோர் அணிகலத்தையும் இவர்க்குப் பூட்டி அழகு பார்க்கத் தவறேன் எனத் டப்படுத்திக்கொண்டு வடித்தது போலவே விளங்கும் சிற்பங்கள் இவை. சொற்சிலையாகத் திகழும் இக் கற்சிலையளவு பொன்னைக் குவித் தாலும் இப்படி உயிரோவியமாகக் கிடைக்குமா!

கண்

இத்தகைய உயிர்க்கலைக்கு விலைபேசுவது என்பது எண்ணத்தின் உயர்வின்மையைக் காட்டும் ஒன்றாக இருக்குமேயன்றி உண்மையாக மதிப்பிடும் மதிப்பு ஆகாது. அம்மன் கோயில் முகப்பிலே ஏற்பட்டது ஓர் ஐயம்! அதனைப் பின்னே கூறலாம் என்றாய்! இந்த இடத்தில் கூறலாம் அல்லவா!

பொன் : மறவாமல் கேட்டாய்.