உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

கண்

31

இளங்குமரனார் தமிழ்வளம் - 31

ஆம்! விரைவாகச் சுழலும் காற்றாடி, சுழல்வதாகத் தெரியவில்லை! ஓயாது விரைந்தோடும் நிலம் ஓடாதது போல் தானே இருக்கின்றது! இவற்றைப் படைத் தவர்க்கு, இவ்வாறிருக்க இயலாதா என்ன! சுகாசனரை எவரும் எளிதாகத் தொல்லை தரக்கூடாது என்று உட்புறம் வைத்தமை நல்ல பொருத்தம் அன்றோ!

பொன் : உண்மைதான். இம் மூன்றாம் தூணில் கூத்தப் பெருமான் எடுப்புமிக்க ஆடல் அரசராக விளங்கு கிறார். இவர் ஆட்டத்திற்குத் தக்கவாறு 'நந்தி' குடமுழாத் தட்டுகிறார்.

கண்

ஆடுவார் ஆடினால், பாடாரும் பாடுவார்; தாளம் போடாரும் போடுவார்; குடமுழா நந்தீசன்' என்னும் புகழ்பெற்ற இவர் குடமுழாத் தட்டக் கேட்க வேண்டுமா? “ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே!” பொன் : இத் தூணின் வடக்குப் பக்கத்தில் இருப்பவர் காமனை எரித்தவர் (காமதகனார்). பெருமான் தவத்தைக் கெடுக்கத் துணிந்தான் காமன். தன் மலரம்புகளை ஏவினான். அவன் அடாச் செயலை அறிந்து நெற்றிக் கண் நெருப்பால் எரித்தார். இதனன விளக்கும் காட்சி

கண்

இது

து.

இதனைத்தானே ஒரு புலவர், "கல்லால் எறிந்தான் ஒருவன்; வில்லால் அடித்தான் ஒருவன்; பிரம்பால் அறைந்தான் ஒருவன்; செருப்பால் உதைத்தான் ஒருவன்; இவர்களையெல்லாம் நல்லவர்கள் என்று விட்டுவிட்டு மலரால் எறிந்தவனை எரித்தது ஏன்?" என்று வினாவினார்.

-

பொன் : பெருமான் நெற்றிக்கண் வெப்பத்தை வெளிப்படுத்தத் தக்க வகையில் வெளிறிப்போன சாம்பல் பூத்த கல்லைத் தேர்ந்து வடித்த தேர்ச்சி எவ்வளவு அருமை யானது!

கண்

கல்லிலே வேலை செய்யும் திறமை மட்டும் போதாது. எந்தக் கல்லை எதற்குப் பயன்படுத்த வேண்டும் என்னும் தேர்ச்சியும் சிற்பிக்கு வேண்டும் என்பதை விளக்கும் சிலைகளுள் இஃதொன்றாகும். இத் தேர்ச்சியாளன் பாராட்டுக்குரியவன்.