உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்

மதுரைக் கோயில் வரலாறு

81

திருவடியார்க்கும் அவ்வப்போது வெண்ணெய் எறி விழுவது உண்டு! அறிவிலா அன்பு என்னென்னவோ செய்யும்! தன் செயலை நினைந்து மகிழும்; பூரிக்கும்; அமைதியும் அடையும். அப்படிப்பட்ட காணிக்கை இவ்வெண்ணை எறி காணிக்கை.

எழுதிப் போட்டிருக்கிறார்களே! வெண்ணெயை எறிய வேண்டா! பீடத்தில் வையுங்கள் என்று; அதை யாவது அறிந்து செய்ய வேண்டாவா!

பொன் : நன்றாகச் சொன்னாய்! பலருக்குப் படிக்கத் தெரியாது. படிக்கத் தெரிந்தவர்களில் பலருக்கும் எண்ணிச் செய்யத் தெரியாது! "அவன் செய்தான் இவன் செய்தான்! அப்படியே நானும் செய்தேன்!இது தான் நிலை! இந்த இரண்டாம் திருச்சுற்றைச் சுற்றலாம். இந்தத் தூணைப் பார். இதில் பிட்டுக்கு மண்சுமந்த பெருமான் கூடையைத் தலையில் தாங்கி நிற்கிறார். பாண்டியன் கையில் பிரம்பொடு நிற்கிறான். வந்தியம்மை ஆயிரம் பிறை கண்ட அந்த மூதாட்டி இறைவன் காலடியில் நிற்கிறாள்.

கண்

அவளுக்குத் தன்னடியைத் தருவதற்காகத் தானே இறைவன் பாண்டியன் பிரம்படிக்கு ஆட்பட்டான். அதனை நினைத்து அடித்திருக்கிறான் சிற்பி! கூனிக் குறுகிய வந்தியம்மை இறைவன் காலடிக்கே நிற்கிறாளே, அரிய நோக்கு அன்றோ இது?

ம்

பொன் : ஆம்! உன் நுண்ணிய நோக்கும் அருமைதான். இத் தெற்குச் சுற்றின் கீழ்பால் இருப்பது திருஞான சம்பந்தர் மண்டபம். இருபாலும் கல்யானையமைந்த வாயிற்படியையுடைய இம் மண்டபத்துள்ளே மாணிக்கவாசகர், சுந்தரர், நாவுக்கரசர், ஞான சம்பந்தர், நெடுமாறர், மங்கையர்க்கரசியார், குலச் சிறையார், மூர்த்தியார் ஆகியோர் சிலைகள் உள்ளன. : இக் கோயில் தொடர்பான அடியார் திருக் கூட்டத்திற்கு அமைக்கப்பட்ட திருக்கோயில் இது! பொன் : ஆம்! சைவத்தை நிலைநாட்டிய அரசி மங்கையர்க் கரசியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் தம் செயலால் ஆளுடைய பிள்ளையார் (ஞானசம்பந்தர்) அருட்பாடல் பெற்றவர்கள் அல்லரோ! அவர்களை

கண்