90
இளங்குமரனார் தமிழ்வளம் - 32 நாகம்சாய்ந் தாடலுங், கை நாகம் துயிலலும்பின் ஆகும்வினைக் கன்றோவே லா!
(அ - ள்) நம்பொண்ணா
-
நம்புவதற்கு ஆகாது; தகர்
-
செம்மறிக்கடா; சிலைவளைவும் - வில்வளைதலும்; கைநாகம் யானை; பின் ஆகும் வினை பின்னே தான் செய்யவிருக்கும் தாக்குதலுக்கு முன்னேற்பாடு.
மானம்
31. தன்னுயிர்போங் காறுமற்றோர் தன்தனந்தீண் டக்கொடாள் மின்னாள், நகங்கொடா வெல்வேங்கை, - துன்னுமயிர் ஈயாது மான், மற் றெவர்க்கும்வென்கொ டான்வீரன் காயாமே னிக்குமரு கா!
-
(30)
(அ-ள்) போங்காறும்-போகும்வரை; மின்னாள் - மின் போன்ற கற்புடைய மகள்; துன்னுமயிர் செறிந்த மயிர்; வென்கொடான் - புறமுதுகுதாரான்; காயாமேனிக்கு மேனிவண்ணன் ஆகிய திருமாலுக்கு.
32. மானமுள்ளா னுங்கவரி மானும் குறைவுவரில் தானே உயிர்விடுவர் தாரணியில் - ஈனமுற்ற ஆடு செவிமயிர றுத்துடலைச் சுட்டவன்பின் ஓடிவரும் வேலா! உவந்து.
-
காயா (31)
(அ
-
ள்) தாரணியில்
-
உலகில்; ஈனமுற்ற - இழிவு
கொண்ட; மயிரறுத்துச் சுடுதல் ஆட்டின் மயிரை வெட்டுதலும், சூடுபோடுதலும் ஆகியன ஆயர் செய்யும் செயல்கள்
கொடுங்கோன்மை
(32)
33. சொற்குற்றம் பாராட்டு மன்னர்துணை யாவாழ்தல், மற்புலிவா யைச்சுவைக்கும் மான்கன்றும், - புற்றரவின் பைவாழ் எலியையும்ஒப் பாமன்றோ, வான்பிடிகூர் மைவாய்கண் வள்ளிகண வா!
-
(அ - ள்) மற்புலி - போராடும் புலி; பை வாழ் படத்தில் பொருந்திய; வான்பிடிகூர் - தேயானையொடு பொருந்திய ; மை வாய் கண் - கருமை வாய்ந்த கண்.
(33)