உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 32.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

இளங்குமரனார் தமிழ்வளம் - 32

இறந்தும் இறவார்

54. ஓயாமல் ஈவோர், உயர்கவிஞர், நீதிமன்னர், மாயாத வீரர், கவி மாலைபெற்றோர், - தூயமகப் பெற்றோர் நல் வாய்மை பிறழார், உயிர்க்குறுகண் உற்றோர்க் குதவிபுரி வோர்.

(அ-ள்) மாயாத வீரர் -அழியாத வீரர்; உயிர்க்கு உறுகண் உற்றோர்க்கு - உயிர்க்குத் துன்பம் அடைந்தோர்க்கு

55. சோலை, அன்ன சாலை, மடம், தூயநதி, வாவி, பிர மாலயம், தே வாலயம், உண் டாக்குமிவர் - ஞாலத்(து) இறந்தும்இற வாரே குகேசநின்தாட் கன்பர்

மறந்தும் பிறவா தவர்.

=

(54)

(அ - ள்) வாவி - குளம்; பிரமாலயம் - ஓதும் சாலைகள்; தேவாலயம் திருக்கோயில்கள்; ஞாலத்து - உலகில்; குகேச - குக + ஈச ; குகனாம் இறைவனே. தாட்கு திருவடிகளுக்கு; மறந்தும் பிறவாதவர் மறந்தும் கூட பிறவித் துன்பத்திற்கு ஆட்படாதவர்.

-

இருந்தும் இறந்தவர்

56. வித்தை நயமறியார்; வேட்டகத்துண் பார்; என்றும் சத்துருவைச் சேவிப்பார்; தன்மனைக்கு - மெத்தமனம் அஞ்சிவிருந் துக்கொளிப்பார்; அன்னவளை முன்னிட்டுத் தஞ்சம் எனவாழ்ந் தவர்.

(அ

-

(55)

ள்) வேட்டகத்து உண்பார் திருமணம் செய்த இல்லில் உண்பவர்; சத்துருவைச் சேவிப்பார் -பகைவரைப் பணிந்து கடமை செய்பவர்; மெத்த - மிக; விருந்துக்கு ஒளிப்பார் விருந்தினரைக் கண்டு மறைவார்; அன்னவள் அஞ்சத்தக்கமனையாள்; தஞ்சம் அடைக்கலம்.

57. தீரா வறுமைபிணி தீராக் கவலையுடை

யாரார் அவருமுரு கையநின்சீர் - ஓரா(து) இருந்தவரும் மெய்யில் இலங்கும் உயிரோ(டு) இருந்தும் இறந்தார்க ளே.

(56)

(அ-ள்) 'தீராவறுமை பிணி' - தீரா என்பதை வறுமைக்கும் பிணிக்கும் கூட்டுக. கவலையுடையார் ஆர் அவரும்'