உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 32.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

இளங்குமரனார் தமிழ்வளம் - 32

வலிதிற் சேறல்

61. தந்தைதாய் முன்னோன் தரைவேந்தர் மாபெரியோர் சிந்தைக் கிசைந்த சிநேகிதரும் - வந்தழைக்க வில்லையெனி னும்விரை வில்வலு விற்செல்லல் நல்லவையா குங்குக! இந் நாள்.

(அ

ள்) முன்னோன்

மூத்தோன், தமையன்; மாபெரியோர் - மிகப் பெரியோர்; சிந்தைக்கு இசைந்த சிநேகிதர் மனம் பொருந்திய நண்பர்; விரைவில் வலுவில் செல்லல் விரைவில் செல்லுதலும், வலுவில் (தாமாகச்) செல்லுதலும்; இந் நாள் - இக் கால நிலையில்.

பிதா ஆவர்

62. மன்னவன், தன்தமையன், மாமன், குரு, வளர்த்தோன், பன்னுகலி தீர்த்தோன், பயம் தீர்த்தோன், - துன்னுகலை தந்தான், இவ் வெண்மரும்பி தாவாகும் எற்கினிய

கந்தா! நீ யேதந்தை காண்.

(61)

(அ ள்) பன்னுகலி சொல்லாதன வெல்லாம் சொல்ல வைக்கும் வறுமை; துன்னு கலை தந்தான் - சிறந்த கலைகளைக் கற்பித்தவன்; எற்கு எனக்கு “கந்தா நீயே எற்கு இனிய தந்தை காண் என இயைக்க.

-

இதனை இதனால் அறிதல்

63. வீரன் சமரத்தில்; வித்துவான் நற்சபையில்;

தாரம் வறுமையில்; நோய் தாதுவில், நல் - லோரல்லோர் தந்தமக வாலறிவார்; தம்பத்தி யால்அடியார்

கந்த! உனைஅறிவார் காண்.

(62)

(அ - ள்) சமரம் - போர்; தாரம் - மனையாள்; தாதுவில் - நாடியில்; தந்தம் மகவால் தம்தம் மக்களால்; தம் பத்தியால்- தம்முடைய பத்தியினால்.

-

(63)

கண் இயல்பு

64. ஆர்க்கும் இரண்டுகண்; கற் றாய்வோர்க்கு மூன்றுகண்; திண் பார்க்குள்ஈ வோர்க்கெழுகண்; பற்றறுமே - லோர்க்கொருகண்