உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 32.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதி சாரம் காப்பு

பருதி மதியுலவு பார்மிசையோர்க் கெல்லாம் தருமநெறி நீதிதனைச் சாற்றக் - கருதியிடு

தூங்கவெழுத் தைந்துபொருள் *சுந்தரவில் செஞ்சடையில் கங்கைசுதன் தந்திமுகன் காப்பு.

(அருஞ்சொற்பொருள்) பருதி - கதிரோன்; மதி - திங்கள்; உலாவும் விளங்கும்; பார்மிசையோர் - உலகில் உள்ளோர்; - சாற்ற - கூற; துங்க எழுத்து ஐந்து - 'நவசிவய' என்னும் சிறந்த ஐந்தெழுத்து; பொருள் - சிவபெருமான்; சுந்தர வில் செஞ்சடை அழகிய ஒளியமைந்த சிவந்தசடை; கங்கை கங்கையையுடைய சிவன்; சுதன் - மைந்தன்; தந்திமுகன் யானை முகத்தைக் கொண்ட மூத்த பிள்ளையார்.

நூல்

-

நூல் கூறும் பொருள்

-

1. அனைத்துல கெங்கும் தானாய் அமரர்கோன் ஆதி ஆகி நினைத்தவர் உளத்தில் நித்தம் நேயமார் நெடுமால் பாதம் மனத்தினில் இருத்தி முன்னம் மறைவலோர் உரைத்த நீதி இனத்தினைத் திரட்டி உள்ள சாரம்நான் இயம்ப லுற்றேன்.

-

(அ - ள்) அனைத்துலகு எல்லா உலகும்; தானாய் தானே ஆகி; அமரர்கோன் இந்திரன்; ஆதி ஆகி முதல் ஆகி; நேயமார் - அன்பால் நிறைந்த; மறைவலோர் - மறைநூல் வல்ல முனிவரர்; நீதிஇனம் நீதிவகை; இயம்பலுற்றேன் - கூறத் தொடங்கினேன்.

  • பாடவேறுபாடு சுந்தரப்பொற்.

(1)