120
(அ
இளங்குமரனார் தமிழ்வளம் - 32
புத்திமான் தனக்குத் தானே மனத்திலே தேறிக் கொண்டு சுத்தனாய் நகைத்தா னாகில் துயரது தோற்கும் அன்றே.
-
-
ள்) வைத்திடும் புதைத்து வைத்துள்ள; தனம் செல்வம்; வியாகுலம் - கவலை; தேறிக்கொண்டு - தெளிவு செய்து கொண்டு; சுத்தனாய் - குறையில்லாதவனாய்; நகைத்தான் ஆகில் சிரித்தான் என்றால்; துயரதுதோற்கும் -அவன் சிரிப்புக்கு முன்னே அவனை வருத்தவந்த துன்பம் தோற்றுப்போகும்.(16)
ஒன்றினால் ஒன்று உண்டாதல்
17. நிதிதெரி சித்தால் போகம் நேரிடும்; மலர்கள் தம்மை அதிதெரி சித்தால் வாசம் அணுகிடும்; அன்றி நல்லோர் பதிதெரி சித்தால் முத்திப் பலன்தரும்; தீக்கு ணத்தால் சதிசெய்துர்ச் சனரைக் கண்டால், பாவங்கள் சம்ப விக்கும்.
(அ - ள்) நிதி - பொருள்; தெரிசித்தால்-கண்டால்; போகம் -இன்பம்; அதி - மிக; பதி - இடம்; சம்பவிக்கும் - உண்டாகும். - பதி-
(17)
தீயோருக்கு உதவி விலக்கல்
18. இடங்கருக் கிடுக்கண் வந்தால் அகற்றுதல் என்றும் ஆகா விடங்கொள்தேள் நெருப்பில் வீழ்ந்தால் எடுத்துவிட்டவனைக்
கொட்டும்
அடங்கிடாத் துர்ச்ச னர்க்கும் அருள்செய்தால் மதித்துப் பாரார், திடங்களால் அபகா ரங்கள் செய்குவர் திண்ணந் தானே.
(அ - ள்) இடங்கர் - முதலை; ஆகா - கூடாது; திடங்களால் மனவன்மையால்; அபகாரங்கள் - கேடுகள்; திண்ணம்- உறுதி.
தீயோர் அறிவுக்கீழ்மை
19. துற்சனர் முன்னே நல்ல துலங்கிய மதுர மான விற்பனக் கவிதை தன்னை விளம்பிடில் அவர்கள் தங்கள் அற்பமாங் குணத்தி னாலே அவகடஞ் செய்வர் என்போல் மற்கடம் தன்கை மாலை தான்படும் வண்ணம் போலும்.
-
(18)
விளங்கிய இனிமையான;
கூறினால்; அவகடம்
வகை.
(19)
(அ - ள்) துலங்கிய மதுரமான விற்பனம் - சிறந்த; விளம்பிடில் அலட்சியம்; மற்கடம் - குரங்கு; வண்ணம்
-