நீதி சாரம்
பன்னிடு மறையோர் நன்மை பரமின்னாட் சேர்த லானும் மன்னவன் அநீதத் தாலும் *மடிந்திடும் நன்மை தானே.
-
133
(அ - ள்) மின் நன்மை - பெண்ணின் நன்மை; மன்னிய விலைத்த; வயங்கு விளங்கு; உவடு -உவர்ப்பு; பன்னிடும் புகழ்ந்து கூறும்; பர மின்னாள்
-
நீதியன்மை; மடிந்திடும்-அழியும்.
-
அயல்மாதர்; அநீதம்
(60)
இதற்கு இது நலம் எனல்
61. தூசறு நீர்க்குச் சீதம், துலங்கிய தோழ னுக்கு நேசம்; வஞ் சனையிலாமை குணமென்ப நேரி ழைக்குப், பேசிடும் பேச்சி னுக்குப் பெருகுமா தரவு தானே,
போசனம் தனக்கீ தெல்லாம், பொருந்துநல் விளக்க மாமே.
-
(அ - ள்) தூசு அறு குற்றமற்ற; சீதம் - தண்மை; துலங்கிய -விளங்கிய; நேசம் -நட்பு; நேரிழைக்கு - பெண்ணுக்கு; ஆதரவு- அன்பு; போசனம் சொல்லப்பட்ட உணவு ; ஈது எல்லாம் இவையெல்லாம்; அவை, சீதம், நேசமுடைமை, வஞ்சனை இல்லாமை, நற்குணம், ஆதரவு என்பன; விளக்கம் - சிறப்பான குணங்கள்.
இன்னதால் இன்னது அழியும் எனல்
62. ஆசனம் எண்ணெ யோடே போசனம் இவைகள் மூன்றும் மாசுறத் தன்கை யாலே வழங்கியே கொண்டா னாகில் பேசிடும் ஆயுள் நாசம், பெருத்திடு மைந்தர் நாசம், தேசுறு மலராள் தானும் இருந்திடாள் செப்புங் காலே
(61)
(அ - ள்) ஆசனம் - இருக்கை; வழங்கி - பயன்படுத்தி; ஆயுள் நாசம் - வாணாள் அழிவு; தேசுறு மலராள் - அழகு பொருந்திய திருமகள்; செப்புங்கால் சொல்லும் பொழுது மூன்று நாசத்தையும் முறையே அறிக.
-
விதியை வெல்லல் அருமை
63. மதகரி பாம்பு புள்ளை மனிதர்கள் கட்ட லாலும் இதமதி பானு தம்மை ஈரராப் பற்ற லாலும் சிதமுள புத்தி மானைத் தரித்திரம் சேர்த லாலும் விதிவசம் ஒருவராலும் வெல்லுவ தரிதாம் அன்றே.
- அழிந்திடும்
(62)
-
-