-
136
இளங்குமரனார் தமிழ்வளம் - 32
பன்னிய கெடுதி பண்ணின் பகைவனாம்; பகைத்து மெய்யில் மன்னிய பிணிதான் காட்டின் மருந்தினால் தீரு மாறே. (அ ள்) பந்து உறவினன்; பன்னிய சொல்லத்தக்க; பகைத்து - மாறாகி; மெய்யில் - உடலில்; மன்னிய நிலைத்த; பிணி - நோய்.
நல்லவர் நலனும் தீயவர் தீதும்
-
வருந்திச்
71. சற்சனர்க் கிதங்கள் செய்யின் தாமும்அங் ஙனமே செய்வார், துற்சனன் தன்னைக் கண்டால் துரந்தவர் முனிவர் என்போல் நற்குணக் கல்லை ஊதில் நீர்தரும் நலமெண் ணாமல்
மற்றொரு கல்லால் மோதின் கனற்பொறி வழங்கு மாபோல்.
(70)
(அ - ள்) சற்சனர் -நல்லவர்; இதங்கள் - நன்மைகள்; அங்ஙனமே - அந் நன்மையே ; துற்சனன் - தீயன்; துரந்தவர் முனிவர் -வெருட்டிச் சினங்காட்டுவர்; கல் - சந்திரகாந்தக் கல்; நிலவொளி அதன்மேல் பட்டால் தண்ணிய நீர் சுரக்கும் கல் என்பர்; ஊதில் நீர்தரும்; ஊதில் குளிர் காற்றுப்படின்; கல்லால் மோதில்-ஒருகல்லை மற்றொரு கல்லால் தாக்கினால்.
-
கற்றோர்க்குச் சிறப்பு
72. மூர்க்கற்கில் அளவின் மட்டும், முயன்றிடும் கிராம ணிக்கும் ஏற்கின்ற ஊரில்மட்டும், இலங்கிய வேந்தி னுக்குக் காக்கின்ற புவியில் மட்டும், கற்றவர் தங்க ளுக்குத்
தேக்கருங் கீர்த்தி எந்தத் தேயத்தும் ஆகும் அன்றே.
(அ - ள்) மூர்க்கற்கு இல் அளவின்மட்டும்
(71)
பிடிவாதக்
காரனுக்கு வீட்டு அளவுமட்டுமே; கிராமணி - கிராம அதிகாரி; ஏற்கின்ற - பதவி ஏற்றிருக்கின்ற; இலங்கிய - விளங்கிய; புவியில் - நாட்டில்; தேக்க அரும் கீர்த்தி -அடக்கி வைக்க அரிய புகழ்; தேயம்-நாடு.
(72)
72.பா.வே.
மூற்கனி லளவு மட்டும் முயன்றிடுங் கிராமணிக்கு
மேற்கின்றன் பதிக்கு மற்ற இறைவனும் இயங்கும் என்றும்
காக்கின்றபுவிக்கு மேரைக் கற்றவர் தேசமெங்கும்
ஆக்குநல் இடங்கள் எல்லாம் பூச்சியன் ஆவன் அன்றே.