140
இளங்குமரனார் தமிழ்வளம் - 32
இழுக்கறு சாயங் காலம் துயிலுதல் என்னும் இந்த
இழுக்குடை யவர்பால் என்றும் திருமகள் இருந்தி டாளே.
-
.
(அ-ள்) அழுக்குத் தூசு அழுக்குடை; போசனம்-உணவு; நிட்டூரங்கள் - கடுஞ்சொற்கள்; சாயங் காலம் (சாயுங்காலம்) - மாலை; இழுக்கு - இழிவு வழக்கங்கள்.
பத்தியிலார்
83. அத்திக்காய் கோவை தேத்தான் ஐவிர லிக்காய் வெள்ளைக் கத்தரி சோற்றுக் காந்தல் கண்டிகை யாவ ரேனும் நத்தியே உண்பா ரானால் நாரணன் தாளின் மீது
பத்திலே வாரா தென்று *பண்ணவர் அருளி னாரே.
(82)
(அ - ள்) தேத்தான்-தேற்றான்கொட்டை; ஐவிரலிக்காய் - கோவையில் ஒருவகை; ஐவேலி என்பது அது; சோற்றுக் காந்தல் பற்றுப்பிடித்த சோறு; நத்தி - விரும்பி; நாரணன் - திருமால்; பண்ணவர்- பெரியோர்.
தீட்டு ஆகாதவை
84. மதலை, நீர் இடுமி டஞ் செம் பொன்னினாம் வட்டில் மின்னார் அதரமார் முத்தம், வேட்டை ஆடிய நாய்கள் கவ்வி உதவிய மிருகம், பச்சை உயர்வனக் கிளிகள் கோதும் இதமுள கனியி வைகட் கில்லையுச் சிட்டந் தானே.
(83)
82.பா.வே.
அழுக்குப் பல் அழுக்குத் தூசும் அதிகபோ சனத்தான் என்றும் ஒழுக்கத்து நிட்டூரங்கள் உரைப்பவன் உதய காலம்
பழுதற்ற சாயங்காலத் துயில்பவன் தன்னைப் பார்த்து இழுக்குற்று மலராள் மாலோ டாகிலும் இராள்நான் என்றே. * பரமனார்.
84. பா-வே.
மதலைநீர் இடுமிடங்கண் மகிழ்ச்சியாய் இரவில்மின்னார் அதரபாத னங்கள் வேட்டை ஆடிய நாய்கள் கவ்வி உதவிய மிருகந்தானும் உணர்ந்ததோர் கிளிகள் கோதும் இதமுள கனிக்கு மென்றும் உச்சிட்டம் இல்லைதானே.