உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 32.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

இளங்குமரனார் தமிழ்வளம் - 32

-

(அ - ள்) செபத்தோர் மறைமொழி கூறுவோர்; இயமன் பாசம் - இயமன் வீசும் கயிற்றுள் மாட்டிக்கொள்ளல்; சொற் பெறும் - புகழப்பெறும்; மவுனி - பேசாநோன்புடையவன்; கலாம் சண்டை; விழிப்போர் உறங்காமல் இருப்பவர்.

நஞ்செனத் தோன்றுவன

94. பருவங்கள் அற்று நூல்கள் பயிலலும், பசியில் லாத தருணங்கள் தம்மில் அன்னம் புசித்தலும், தரித்தி ரற்குக் கிரணங்கள் ஒத்த மின்னார் கோட்டியும், கிழவ னுக்குப்

பொருமந்த வேற்க ணாளின் போகமும் விடமாய்த் தோன்றும்.

(93)

(அ - ள்) பருவங்கள் அற்று இளமைப் பருவம் கடந்து; தருணம் - பொழுது; கிரணம் - ஒளிக்கற்றை; மின்னார் - மகளிர்; கோட்டி - கூட்டம்; பொரும்- தாக்கும்; போகம் - இன்பம்; விடம் நஞ்சு.

தீயவன் இயற்கை

95. அரவுதுர்ச் சனரில் தீயோர் ஆரெனில் அரவு தன்னில் பரவு துர்ச் சனனே தீயோன்; பாம்புமந் திரத்தில் நிற்கும்; திரள்மணி *மருந்து தம்மால் தீர்ந்திடும்; சேர்ந்த துட்டன் ஒருவர்யோ சனையும் கேளான் அவன்கொடி யோனென் றோர்வாய்.

-

-

(94)

(அ ள்) அரவு துர்ச்சனரில் - பாம்பு தீயோர் என்னும் இருவருள்; தீயோர் மிகத்தீ தானவர்; ஆர்எனில் யார்என்று வினவினால்; பரவு - பரவிய; திரள்மணி மருந்து - திரண்ட மணியாலும், மருந்தாலும்; யோசனை - நல்லுரை; ஓர்வாய் - அறிவாய்.

கீழோன் தன்மை மாறாமை

96. கண்ணுறு கற்பூ ரத்தால், புனுகுகத் தூரி யாலே பண்ணிடு சேறு செய்தே, உள்ளியைப் பதித்துப், பன்னீர்த் தண்ணீராற் பயிர்செய் தாலும்தன்நாற்றம் நீங்கா தேபோல் நண்ணிஎத் தனைசொன் னாலும் துர்ச்சனன் *நல்லன் ஆகான்

(95)

  • யதனால் நிற்கும் சேர்ந்ததூர்ச் சனன்தான் என்றும்.