உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 32.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பும் அறிவும்

அன்பும் அறிவும் ஆவன செய்யும்

ஆசை ஒழிந்தால் அடையா துன்பம்

ளமைக் கல்வி எளிதில் நீங்கா

ஈகை வேண்டும் மேகம் போல

உரைப்பதில் நவல்லான் உயர்ந்தோன் ஆவன் ஊருக் குழைப்போன் உத்தமன் என்பான் எண்ணித் துணியான் புண்ணியம் அடையான் ஏதும் அறியான் நானென தென்பான் ஐயப் படுவோன் அழிவது திண்ணம் ஒன்றாய்க் கூடில் நன்றாய் முடியும் ஓதி மறப்போன் ஓட்டைக் குடமே ஒளவை போல எளிமை வேண்டும் அஃதிவண் ஆக்கும் அளவில் புகழே

கற்றவர் கடமை ஒற்றுமை ஆக்கல் காலம் அறிந்தால் காரியம் சிதையா கிட்டிய தொழிலில் கீர்த்தி தேடு

கீழ்மேல் உரைப்பார் பொதுவறி வில்லார்

குணத்தில் பெரியோர் இணக்கம் தேடு கூடிப் பிரிதல் குறைந்தோர் தொழிலே கெடுவது வேண்டின் அடுத்தவர்ப் பழிக்காய் கேட்டில் விலகுதல் கெடுதற் குறியே