68
இளங்குமரனார் தமிழ்வளம் - 32
நியமநிதி - முறைமையான செல்வம்; வாசமது பண்ண
சேர்ந்திருக்க.
யுத்தத்திற்(கு) அஞ்சற்க; அஞ்சில் அதுகொல்லும் கத்திமுனை யாகிக் கவிழ்ந்து.
-
கவிழ்ந்து வீழ்ந்து.
யூகத் தலைவனையே ஒன்றிச் செயித்துவிடல் போகத் *தொலையுமப் போர்.
-
(118)
(119)
யூகம் அணிவகுப்பு; மதிவலி வாய்ந்த. போக ன்றுபட்டுப் போர்க்குப் போக; அப்போர் தொலையும்- அப்போர் இல்லாமல் ஒழியும்.
ஒன்
எக்களத்துப் போரும் இணங்கும்; இணங்காது
சக்களத்தி செய்யும் சழக்கு.
(120)
இணங்கும் - அமைதிப்படும்; சக்களத்தி - மூத்த மனைவி, ளைய மனைவியர்; சழக்கு சண்டை, தகராறு.
-
ஏமாந் திருப்பரோ இவ்வுலகின் மாந்தர்கள்
பூமாது பொன்னினையும் போர்த்து.
=
(121)
பூமாது நிலமகள்; "நிலமகள் பொன்னைத் தன்னகத்து வைத்து இருக்கவும் முயன்று உழைத்து அதனைப் பெறாமல் மாந்தர்கள் ஏமாந்து இருப்பரோ" என்க.
ஐயங் கொடுக்க அறுகீரை போல்துளிர்க்கும்
மெய்யன்(பு) உடையார்க்கு மற்று.
(122)
ஐயம் - பிச்சை; அறுகீரை - அறுக்க அறுக்கத் தளிர்க்கும்
அறைக்கீரை.
ஒவ்வொன்றாய் ஒன்றில் ஒருதூணி; ஒன்றில்லா(து)
ஒவ்வொன்றாய் நீங்கில்ஒரு தூசு.
(123)
தூணி -ஓர் அளவு; நான்கு மரக்கால் அளவு; தூசு - துகள்.
யோசனையால் ஒவ்வொன்றும் ஊகித்(து) உணராமுன்
வாசனையில் செய்ய *வழு.
- துலையும்.
(124)