உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 32.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

இளங்குமரனார் தமிழ்வளம் - 32

சுவையுடைத் தன்மையான் நலத்த சரக்கதன் றெனத்தோன் றவப்பெயர் முதற்கண்

சார்ந்ததவ் வீயைநவ் வேயாச்

சமைத்தனர் அமைத்தோள் கருநெடுந் தடங்கண்

சரிவளைக் கரநறு நுதலே!

(2)

இராமநாதபுரம் மன்னர் அவைக்களப் புலவர் அட்டாவதானம் வேலாயுதக் கவிராயர் இயற்றிய

அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்

முலைப்பால்தந் தீன்றதாய் புதல்வரைக்காப்

பாற்றிவரு முறைபோல் நீதிக்

கலைப்பாலஞ் செவிப்பாலூட் டிப்புரந்து

மாந்தர்பாற் கருணை பூத்தான்

தலைப்பாரந் தவிர்ந்தோமென் றனந்தன்மன

மகிழ்ச்சிபெறத் தரணி தாங்கு

மலைப்பாரப் புயத்தன்முத்து ராமலிங்கச்

சேதுபதி மன்னர் ஏறே.

(3)