உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

இளங்குமரனார் தமிழ்வளம் – 33

வயிற்றைக் காட்டி "இங்கே எரிகிறது; தண்ணீர் வேண்டும்" என்றார்.

இவர் கிறுக்கராக இருக்கிறாரே என்று வேலைக்காரர்கள் பேசிக் கொண்டனர். கிறுக்கோ, கிறுக்கு இல்லையோ; முல்லா தம் தேவையைத் திறமையாகப் பெற்றுக்கொண்ட அமைதியில் உறங்கப்போனார். 'தண்ணீர்! தண்ணீர்!' என்றால் விடுதிக்காரர் கவலைப்பட்டிருக்க மாட்டார். 'தீ -தீ' என்றதால் தானே விழுந்தடித்து வந்தார்? தீ வேலை நல்ல வேலைதான்.

30. நான் துணிந்து சென்றேன்

ஒரு பிச்சைக்காரன் "அம்மா சோறு; அம்மா சோறு என்று கேட்டான். வீட்டுக்காரர் என்னவென்று கேட்கவில்லை. பிச்சைக்காரனும் விடாப்பிடியாகக் கத்திக் கொண்டிருந்தான். பின்பு, வீட்டுக்காரர் வெளியே வந்து தலைகாட்டினார்.

'பிச்சைபோடுகிறீர்களா? இல்லையா?" என்று பிச்சைக் காரன் உரக்கக் கத்தினான். வீட்டுக்காரர்க்குச் சினம் வந்தது கொடுத்துவைத்தவன் மாதிரியல்லவா அதிகாரத்துடன் கேட்கிறான் என எண்ணிப், "பிச்சை போடாவிட்டால் என்ன செய்வாய்?' என்றார்.

"என்ன செய்வேனா? அடுத்த வீட்டுக்குப் போய் விடுவேன்" என்றான் பிச்சைக்காரன்.

முல்லா வாழ்விலும் இப்படியொரு முறை நடைபெற்றது.

'அரசர் முன்னே குதிரையொன்று நின்றது. அதனை ஏறிச் செலுத்தப் பலர் முயன்றனர். ஒவ்வொருவரையும் அது குப்புற தள்ளி விட்டது. ஏறி அமர முயன்றவர்கள் ஏறுவதற்கு முன்னரே வீழ்ந்து விட்டனர். அதனைக் கண்ட மற்றவர்கள் உதறலெடுத்து நெருங்காமல் நின்றுவிட்டனர்; நான் துணிந்து சென்றேன் என்றார் முல்லா. “பின்பு என்ன ஆயிற்று" என்றார் முல்லாவின் உரையைக் கேட்டுக்கொண்டிருந்த ஒருவர், "நானும் குதிரைமேல் ஏற முடியவில்லை; கீழே தள்ளிவிட்டது" என்றார். அனைவரும் சிரித்தனர்.