உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார் “ஈண்டு வாரா நெறி" (256)

எனவும் சொல்லப்படும்.

109

"சித்தி என்பது நிலைசேர்ந்த அனுபவம்" என்னும் வள்ளலார் வாக்கு நிலை சேர்தலைச் சுட்டியது. அந்நிலை சேர்ந்த நிலை வள்ளுவரால் "ஈண்டுவாரா நெறி" "பேரா இயற்கை" எனப்பட்டனவாம். இதனால் வள்ளுவர் வழியின் விளக்கம் வள்ளலார் வாழ்வால் தெளிவாகின்ற தென்க.

நமக்குரிய மெய்யான சார்பு எதுவென உணர்தல்; பின்னர், அச்சார்பு அல்லாச் சார்பு எதுவென உணர்தல்; அவ்வுணர்வால் சார்பு அல்லாச் சார்பை விடுத்துச் சார்புக்குரிய சார்பை அடைதல்; அச்சார்பால் மீளவும் சார்தராச் சார்பை அடையா திருத்தல். இவற்றைச்,

"சார்புணர்ந்து சார்புகெட ஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய்"

என்பதால் கூறுவார் வள்ளுவர்.

சங்கம் சாலை சபை கண்ட வள்ளலார் 'சித்தி வளாகம்' கண்டு பேரா இயற்கை உற்றமை இவற்றின் விளக்கமாக விளங்குவதை மேலும் விளக்க வேண்டுவதில்லை.

நிறைவு

வள்ளுவப் பெருந்தகையின் அருளுடைமை ஒப்புரவு மெய்யுணர்தல் தவம் என்பவற்றுக்கெல்லாம், முழுதுறு விளக்கப் பொருளாகவும் வாழ்வியற் சான்றாகவும் நின்று நிலைபெறக் காட்டுவன வள்ளலார் வாக்கும் வாழ்வும் வரைவும் எனல் கையிடைக் கனிபோல் இனிதின் விளங்கும். தமிழர் பெற்ற இப்பேறுகள் அருமையும் பெருமையும் மிக்கவை. இவற்றைக் கருதிப் பார்த்துக் கடைப்பிடியாகக் கொண்டால் பெரும்பயன் உண்டாதல் உண்மையாம்.