உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

231

"இறந்தவரை எழுப்புகின்ற உறுவனேனும், உயிருடம்பைக் கடித்துண்ணும் கருத்தனேல், ஞானியெனக் கூறொணாதே” என்றும்

'இருவர் பிணியாளர் வேறு கதியின்றி என்பாற் புகலடைந் திருக்கின்றார். அப்பிணி சிறிது சாந்தப்பட்டவுடன் பிரயாணப்பட்டு அவ்விடம் வர நிச்சயித்திருக்கிறேன்' என்றும்,

"(தங்கள் உத்தியோகம் நீங்குவது) கேட்டநாள் தொடங்கி மனம் சஞ்சலித்துக் கொண்டே யிருக்கின்றது." என்றும்,

<<

ராமலிங்கசாமி என்று வழங்குவிப்பது என் சம்மதமன்று என்னை? ஆரவாரத்திற்கு அடுத்த பெயராகத் தோன்றுதலில், இனி அங்ஙனம் வழங்காமை வேண்டும்" என்றும், "எவ்வகையாலும் களைகண் இன்றி பசித்தாரது பசி நீக்குதற் பொருட்டே திருவருளால் கிடைக்கும் பொருட் கருவியை அங்ஙனம் செலுத்தலின்றி இங்ஙனம் செலுத்தும் வெறும் செயற்பாட்டிற்கொருப்படுங் குறைமையும் கோடற் கிடனாம். ஆதலால், இது விடயத்தில் துணிந்துரைத்தற்குச் சித்தமும் நாவும் செல்வன அல்ல" என்றும்,

"நாயக்கர்சாமி என்பவர் தற்காலம் இவ்வுலகில் இருக்கின்ற தான்தோன்றிச் சாமிகளில் தலைநின்ற சாமி என்க. என்னை? அறிய வேண்டுவனவற்றை அறிய முயலாமையொடு பித்த மயக்கால் மனம் சென்றவழி சென்று பித்தச்சாமி என்னும் விசேடப்பேர் ஒன்று மிகையாகக் கொண்டிருக்கிறார். ஆதலால் சூழும் வண்ணம் சூழ்க" என்றும்,

"இதைச் சமரச வேத சன்மார்க்க சங்கத்தவர் அல்லாதவர் களுக்கு வெளிப்பட வாசிக்கப்படாது என்றும் இறுக்கம் இரத்தின முதலியார்க்கு எழுதிய திருமுகங்கள் (37) காட்டும் குறிப்புகள், சன்மார்க்க விளக்கக் குறிப்புகளாகக் கொள்ளத் தக்கனவாம்.

"அப்படிப்பட் இடங்களிலெல்லாம் வாக்கினால் சமீபித்தும் மனத்தினால் நெடுந்தூரமாகியும் இருக்க வேண்டும்"

"தாயைப்பார்க்கிலும் அனந்தங்கோடிபங்கு நம்மிடத்தில் தயவுள்ளவன் நம் ஆண்டவன்"

<<

என்னைக் குறித்துத் தாங்கள் பணவிசயத்தில் பிரயாசை எடுத்துக்கொள்ள வேண்டாம்"