உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரகத்தியமும் புதிய ஐந்திறமும்

157

முற்பட வழங்கும் இலக்கணத்தைப் பிற்பட விரித்துப் பெருக்குவது இலக்கண மரபு. தொல்காப்பியக் கூற்று வகைகள் கிளவித் தொகைகளாகக் கோவை நூல்களிலும் அகப்பொருள் இலக்கண நூல்களிலும் வளர்ந்தமை சான்று. அவ்வாறே புறத்திணை இயல் என்னும் தொல்காப்பிய ஓரியல் புறப் பொருள் வெண்பாமாலை எனத் தனிநூலாக விரிந்தமையும் சான்று. நூலளவில் பெருகாமல் செய்தியளவில் பெருகுதலும் இவ்வழிப்பட்டதேயாம்.

"எடுத்தல் படுத்தல் இரண்டே ஓசை'

எனத் தேற்றேகார மிட்டுக் கூறுகிறது முத்துவீரியம் (59). இதனைப் பேரகத்தியமோ,

'எடுத்தல் படுத்தல் நலிதல் விலங்கல்

ஆக நான்கே எழுத்தின் ஓசை” (80)

என்கிறது. இது நச்சினார்க்கினியர் உரைவழி வளர்ந்ததாகும் (பிறப்பு 6)

முன்னை இலக்கணர் கூறாத இலக்கணத்தைப் பின்னை வழக்குக் கொண்டு பின்னை இலக்கணர் இணைத்துக் கூறல் வழக்கு. இவ்வாறு வந்ததே நன்னூற் பதவிய லாட்சி. எ எழுத்து களுக்குப் பால் இலக்கணம் கற்பித்தல் பண்டையோர் வழக்கன்று.

"குறிலாண் பாலும் நெடில் பெண் பாலுமாம்"

“ஆய்தமும் மெய்யும் அலியெனப் படுமே”

என்னும் பேரகத்தியம் (51, 52) பின்வரவு உரைக்கும்.

பிற்காலப் பாட்டியல் நூல்கள் எழுத்துகளை நச்செழுத்து அமுத எழுத்து எனப் பிரித்துக் காட்டிப் பேசுவன். அதனை எழுத்திலக்கணத்திலே காட்டித் தன் பின் வரவை நாட்டுகிறது பேரகத்தியம்.

"ஒவ்வல், குறில் கச தநபமவ அமிர்த எழுத்தே" (57) 'அளபெடை மக்குறள் ஆய்தநஞ் செழுத்தே" (58)

என்பவை அவை,