உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

இயல்பற்றி இத்துணைச் சொல்லாட்சிகள் ஒரு நூலில் இயல்வதா? மயனார்க்கு இயன்றதோ இல்லையோ ! கருமாரி தாசராம் வீரபத்திரர்க்கு இயல்வதே என்பதற்குக் 'கருமாரியம்மை புராணமே' சான்று ! 'குண்டலீ' என்னும் பெயரால் அம்மையை விளிக்கும் 700 பாடல்களே குறித்த சான்று ! 7001 எழுசீர் விருத்தப் பாடல்களில் பத்தில் ஒரு பங்கை அது பற்றிக் கொள்கின்றதே!

இவ்வைந்திற நூல், 'ஐந் திற' நூல் அன்று ! ஐந்திர நூலும் அன்று ! இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில், முத்துவீரியத்திற்கும் பிற்பட்டதாம் ஒரு நூல், பேரகத்தியத்திரட்டெனப் புறப் பட்டதே, அப்படிப் புறப்பட்ட நூல்; ஆயின், தனித்தமிழால் இயன்றதும், சொல்வளச் செறிவு அமைந்ததும் பாராட்டுக்கு உரியவை.

முற்றும்.