உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்வு சிறக்க! அமைவு பெறுக!

திருவள்ளுவர் காலத்தை அறிஞர்கள் தம் ஆய்வின் வழியே காட்டினர். அரசு, அந்நாளை ஏற்றுப்போற்றி நிலை நாட்டியது. அவ்வாறே, தொல்காப்பியர் காலமும் தீர்மானிக்கப்பட வேண்டிய கட்டாயம் உடையது. அவர் காலத்தைப் பல்வேறு அறிஞர்கள் சுட்டிச் சென்றுளர். இந் நாளிலும் ஆய்கின்றனர்.“ஒரு முடிபு செய்யப்பட வேண்டும்". அதற்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இஃதாம்! இங்குக் காட்டப் பட்ட சான்றுகளின் மேலும், வலுவாய் சான்று காட்டி நிறுவினால், அவ்வாறு நிறுவுவார் கொள்ளும் மகிழ்வினும் நிறை மகிழ்வு எளியேன் கொள்வேன். அம் முயற்சி பெருகி நன் முடிபொன்று வாய்க்குமாக! அதனை அரசு வள்ளுவர் நாளை ஏற்றது போல் ஏற்றுப் போற்றி நிலைப்படுத்துமாக! வாழிய நலனே! வாழிய நிலனே!

இன்ப அன்புடன்,

இரா.இளங்குமரன்

26.10.2008