உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

இளங்குமரனார் தமிழ்வளம்-38

38. இனியளிக்கும் பதவிதனக்கு என் செய்வீர்? எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

சொர்க்கமெனும் ஒருபதவி இருக்க மாலைத் துளவணியும் அரிபதவி இருக்க மேலை நற்கயிலை மலையிருக்க நினைத்தோர்க் கெல்லாம் நயந்தமுத்தி நகரமொன்றே நல்கா நிற்பீர்; பொற்கையினால் உமைவணங்கிப் பரிந்து பூசை புரிந்துதவம் தெரிந்துதினம் புகழ்வோர்க் கெல்லாம் எற்குலவு புகழருணை ஈச னாரே

இனியளிக்கும் பதவிதனக் கென்செய் வீரே?

(பொ-ரை.) ஒளிவிளங்கும் புகழ்வாய்ந்த அண்ணா மலையாரே, சொர்க்கம் எனப்பெறும் ஒப்பற்ற பதவி இருக்கவும், துளவமாலை அணியும் திருமால் பதவி என ஒன்று இருக்கவும், மேம்பட்ட கயிலைமலை என ஒன்று இருக்கவும் நினைத்த வர்க்கெல்லாம் விரும்பிய முத்தியாகி நகரம் ஒன்றையே வழங்குவீர்; அழகிய கையால் உம்மை வணங்கி விருப்புடன் வழிபாடுசெய்து, தவநெறி பேணி, புகழ்ந்து பாடுபவர்களுக்கு இனிமேல் வழங்கக் கூடிய பதவிக்கு என்ன செய்வீர்?

(வி-ரை.) நினைத்த அளவுக்கே முத்தி தரும் நீவிர், நினைந்து கையால் வணங்கி, வழிபாடு ஆற்றி, தவம் பேணி, புகழ்பாடி இருப்பவர்க்கு எப்பதவி தருவீர் என்று வினாவு முகத்தான் நினைக்க முத்தியருளும் அருணைப் பெருமை யுரைத்தாராம். அரிபதவி - வைகுண்ட பதவி; கயிலைமலை - கயிலாயபதவி. எற்குலவு - (எல் குலவு) ஒளி விளங்கும். அருணை, நினைத்தோர்க் கெல்லாம் முத்தி வழங்குதலை, "அரிதினில் பெறும்பேறனைத்தும் ஒருகால் கருதினர்க் களிக்கும்" என நூல் தொடக்கத்தே கூறினார். (38)

39. அருணைச் சித்தர் அருஞ்செயல்

சித்து

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் வீரத்தை அணிமழுவார் உமைபங் காளர்

விளங்கருணைச் சித்தர்யாம் விளம்பக் கேள்;ஆ

காரத்தை எமக்கிடுகஞ் சத்தை யேகோ

கனகமெனக் காட்டிடுவோம் கரியோ ருக்குத்