உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

40. அருணைச் சித்தர் அருஞ்செயல்

சித்து

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

பாதமெமக் களித்தவரு ணேச னார்க்கின் பச்சிலைபொன் செய்திமையோர் பசிநோய் தீர ஓதுகடை மருந்தளித்த சித்த ரேம்யாம்

ஒருபிடிசோ றல்லதுகூ ழுண்டோ அப்பா

மாதவர்தம் திருவாணை கரிகள் எல்லாம்

மாதங்கம் ஆக்குகிற்போம் மருந்தில் லாதே ஏதமற நாகமொளித் தரவாச் செய்வோம்

இரும்பையும்பொன் னாகவுரைத் திசைவிப் போமே.

இதுவும் சித்துக்கும் இயல்புக்கும் இரட்டுறலாக அமைந்ததாகும்.

சித்து

(பொ-ரை.) திருவடிப்பேறு எமக்கு அளித்த அண்ணா மலையார்க்கு இனிய கல்லைப் பொன்னாகச் செய்து, தேவர்களின் பசித்துயர் நீங்குமாறு உயர்ந்த கடை மருந்தினை அளித்த சித்தர்களாகிய யாங்கள், அப்பா, ஒருபிடி சோறே அல்லாமல் எனக்கு வேறு உணவு உண்டோ? சித்து வல்ல பெரியோர்கள் மேல் ஆணை! கரிகள் எல்லாவற்றையும் சிறந்த பொன்னாக்கு வோம்; மருந்து இல்லாமலே குறை நீங்கத் துத்த நாகத்தை ஒளியுடைய தராவாகச் செய்வோம்; இரும்பையும் பொன்னாக உரைகல்லில் தேய்த்துப் பொருந்தச் செய்வோம். இயல்பு ;

திருவடிப்பேறு எமக்கு அருளிய அண்ணாமலையார்க்கு இனிய வில்லாகப் பொன்மலையாம் மேருமலையைச் செய்து, தேவர்களின் பசிநோய் தீர உயர்வாகக் கூறும் கடைந்து எடுத்த அமுதளித்த சித்தர்களாகிய நாங்கள் ஒருபிடி சோறு அல்லது வேறுணவு உண்டது இல்லை. அப்பா, அரிய தவத்தைச் செய்தவர்கள் மேல் ஆணை; ஆணை; கரிகளாகிய யெல்லாம் 'மாதங்கம்' என்னும் பெயருடையதாக்குவோம்; மருந்து இல்லாமலே குற்றம் நீங்கப் பாம்பை ஒளியுடைய அரவு

யானைகளை