உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

'உண்ணாமை வேண்டும் புலாஅல்; பிறிதொன்றன் புண்அது உணர்வார்ப் பெறின்"

(257)

ஒன்றன் புண்ணா புலால்! அந்தப் புண்ணைத் தின்னும் புழுவா நான்! புழுத்த உடலை, புண்ணாம் புலால் கொண்டு உண்டு -வளர்க்கவா?

வேண்டேன்! வேண்டேன்!

வேண்டுவேன் என் தாயிடம்! வேண்டுவேன் தந்தையிடம்! வேண்டுவேன் மாமனிடம்!

கொண்டாள் முடிவு!

தீர்மானித்தே விட்டாள்!

பெற்றோர் முன்னே வழியும் கண்ணொடு நின்றாள்; மொழியும் குழற விம்மினாள்!

அறிவு மணியாம் - பண்பு மணியாம் - அன்பு மணியாம் தங்கள் கண்ணின் மணியாம் செல்வி,

கண்ணீர் வழிய நின்ற காட்சி பெற்றோரைக் கலங்க

வைத்தது!

கதறக் கதறக் கொல்ல வல்ல புலவுக் கடை மாமனையும் கலக்கியது! என்னே என்னே என்றனர்!

கண்ணீர் துடைத்துக் காரணம் கேட்டனர்.

"இன்று தொட்டுப் புலாலைத் தொடேன்; பொறுத்துக் கொள்ள வேண்டும்."

வெறுஞ்சோற்றைத் தின்றும் வாழ்வேன்; ஊற்றவும் தொடவும் ஒன்றும் வேண்டா!

குறளைப் படித்தேன்; கொன்று தின்னல் குற்றம் உணர்ந்தேன்; உயிரைக் கொன்று தின்று வாழ்வதினும் உயிரைவிடலும் நன்றெனக் கொண்டேன்" என்றாள்.

தந்தை உருகினார்; தாயோ கண்ணீர் வடித்தார்.

"நீ சொல்லியதை மீறி எதையேனும் நாங்கள் செய்ததும் உண்டோ?

உன் விருப்பம் எதுவோ அதுவே எங்கள் விருப்பும் அழாதே' என்று தேற்றினார் மாமனும்.

இத்தொழில் அன்றி எத்தொழிலும் யான் அறியேன். குடும்பப் பிழைப்பே இதனைக்கொண்டே நடக்கிறது.நீ அறியாத தன்றே இது. வேறு தொழிலை உடனே கொள்ள அறியேன்;