உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல்

103

இல்லை இல்லை நான் உண்டு வைத்தது அது; நீங்கள் சாப்பிடவே இல்லை என்றார்.

எனக்குள பசியைப் பார்த்தால் நீங்கள் சொல்வது சரியாய் இருக்கலாம் என்ன மறதி எனக்கு என்று மேலும் நகைத்தார்.

தம்மை மறந்து ஊணை மறந்து உறக்கம் மறந்து ஒரு முகப்பட்ட ஆய்வே ஒருமைக்கட்டான் செய்யும் ஆய்வாம். இந்த அறிஞர் ஐசக்கு நியூட்டனார் என்பார். ஒரு குத்து விளக்கு வெளிச்சம்!

ஒரு மாணவர் படித்துக் கொண்டிருக்கிறார்.

அவர்க்குக் கற்பிக்கும் ஆசிரியர் உள்ளே போகிறார்; வெளியே போகிறார்; திண்ணையில் நிற்கிறார்; திரும்பி வருகிறார்; விளக்கின் பக்கம் செல்கிறார்; வீடெல்லாம் பார்க்கிறார்;

மூக்கைப் பொத்திக் கொண்டே இப்படித் திரிகிறார். கடைசியில் கண்டார்!

எண்ணெய்க் குடத்தில் எலி விழுந்து செத்திருக்கிறது அது அழன்று அழுகியும் போனது.

அக்குடத்து எண்ணெயை எடுத்து விளக்கு ஏற்றப்பட்டது. அந்நாற்றமே சுற்றிச் சுற்றிச் சுழல்கின்றதெனக் கண்டார். ஆனால் மாணவர்க்குத் தெரியவில்லை! அவர் படித்துக் கொண்டிருந்தார்.

இஃது ஒரு நாள் நிகழ்ச்சி:

ன்னொரு நாள் நிகழ்ச்சி:

ஆசிரியர் உண்டார் ; "உறைப்பு இல்லை; உப்பு இல்லை என்றார். அவர் துணைவியார் அந்த மாணவனைச் சுட்டி "இதுவும் சாப்பிடத் தானே செய்தது; உறைப்பு இல்லை; உப்பு இல்லை என்று சொல்லவில்லையே" என்றார்.

அதற்கு ஆசிரியர், "அவனுக்கு என்ன வேண்டும்? நன்னூல் வேண்டும்; பிரபுலிங்கலீலை வேண்டும். வேறென்ன வேண்டும்?" என்றார். தம் தந்தையார் கற்ற கல்வி நிலையை இப்படிச் சுட்டி எழுதுகிறார்.