உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. விரைந்து தொழில் கேட்கும்

ஒரு பெரு விழா

அறிவியல் ஆய்வுக் கூடத் திறப்பு விழா!

மாணவர்கள்,ஆசிரியர்கள்

பொதுமக்கள் பெருந்திரள் - மாணவர்கள், ஆசிரியர்கள் ஆயோரைச் சேர்த்தால் ஆயிரவர்க்கு மேல்!

மாலையில் நிகழ்ச்சிக்கு முன் விருந்து.

எவரோ

-

-

முந்தி வந்தவர் தம் இலையை வாயிலின்

முன்னே போட்டார்.

வழி வழி அப்படியே ஆயிற்று.

ஆயிரவர் இலைகளும் வாயிலில் கிடந்தால்?

ஓர் ஆசிரியர்க்குப் பளிச்சிட்டது!

அவ்வளவுதான் அவர் குனிந்தார் கிடந்த லைகளை எடுக்கத் தொடங்கினார்.

என்ன ஆனது?

ஐயா! ஐயா! நாங்கள் எடுக்கிறோம் என மாணவக் கும்பல் வாரியது!

பொது மக்களும் குனிந்தனர்!

பின்னே வந்தவர்கள் இலைபோடும் ஒதுக்கிடத்தில் தாமே போட்டனர்.

தூய்மைக் கேடு எவ்வளவு எளிதில் நேரிட்டது?

தூய்மை ஆக்கம் எவ்வளவு எளிதில் ஆயிற்று!

உள்ளம் ஒன்றிய உண்மைத் தொண்டு,

ஊரை ஆளும்! உலகை ஆளும்.

இது இலை போட்ட ஒரு காட்சி! இன்னொன்று இலை பறித்த காட்சி!