உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல்

129

காவலரைத் தூண்டித் கண்டுபிடிக்க வைத்த இறைவனுக்கு நன்றி கூறினார்.

ச்சிறைப்பாடாவது மகன் திருந்துதற்குத் துணையாம்

என நம்பினார்.

மைந்தன் சிறைப்படவும் வருந்தாத் தாயும் அந்நிலையை வாய்ப்பென வாழ்த்தும் தாயும் உள்ளமை வியப்பே அல்லவோ!

குடித்து விட்டு நாளும் வருவான்.

கும்மாளத்தோடு நில்லான் பெற்ற தாயெனவும் பாராமல் அடிப்பான் மிதிப்பான்.

மதியை மயக்கும் மதுவில் வீழ்ந்தவனுக்குத் தாய் என்ன? தாரம் என்ன?

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள் பெற்றவள்.

ஒரு நாள் அப்பெற்ற மனமும் தாங்காத் தாக்குதல்! "முடிவு செய்தே ஆக வேண்டும்; இனி முடியவே முடியாது" எனத் தீர்மானித்தாள்.

வெருட்டி வெருட்டித் தாக்கிய மகனிடம் தப்ப வேண்டிக் கூரைப் பகுதிக் குடிசையுள் நுழைந்தாள்.

ஆங்கும் புகுந்தான் அடித்துத் துரத்தும் குடிமகன்.

குடிசைக்குள் வரவும் உள்ளே தள்ளிக் கதவைச் சாத்தி, மண்ணெண்ணெயைக் கூரை மேல் தெளித்துத் தீயும் மூட்டினாள். பற்றிய தீயைச் சுற்றிலும் இருந்தோர் கண்டு ஓடி வந்து அணைத்தனர்.

உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் சேர்த்துளர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடந்துள நிகழ்ச்சி இது.

பெற்ற தாயே, உயிரோடு மகனுக்குத் தீ மூட்ட, நேர்ந்த கொடுமை!

தாயாரும் தாங்காப் போதைக்குடியை, எவரே தாங்குவர்!