உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

"வாழ்வியல் வழிநடை" என்னும் இந்நூல் பன்னிரு கட்டுரைகளையும், ஓர் உரையாடலையும் கொண்டது.

இவற்றுள் தமிழக வரலாற்றுச் செய்தி, இந்திய வரலாற்றுச் செய்தி, உலக வரலாற்றுச் செய்தி ஆகியவை உண்டு.

கதையும் உண்டு. உரையாடலும் உண்டு. ஆனால் அனைத்தும் வாழ்வியல் நூலாகிய வள்ளுவத்தை வழிநடையாகக் கொண்டவை.

வழிநடையே வாழ்வு நடையாகக் கொண்டது தமிழ் உலகம். அதனால் நல்வழி, நன்னெறி, நீதிநெறி, அறநெறி என்றெல்லாம் நூல்கள் கிளர்ந்தன.

நடக்கும் நடை - நடத்தை தானே!

நடத்தை ஒழுக்கம் தானே!

வாழ்வியல் வழிநடை வையகப் பொதுமை வாய்ந்தது. அதன் மூல நடை வையகப் புலவர் வள்ளுவர் வழியது. பொய்யா விளக்கில் இதன் மெய்ம்மம் காண்க. (கட்டுரை 12).

திருவள்ளுவர் தவச்சாலை,

அல்லூர் - 620 101

திருச்சி மாவட்டம்

அன்பன், இரா.இளங்குமரன்