உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22.

சீற்ற மிக்கு வந்தார் ஒருவர் கம்பளி ஆடைக் கடைக்குள் புகுந்தார்.

66

கடனெதும் தரவேண்டியில்லை. கடனுளதாகக் கடிதம் வந்தது" என்றார்.

பொறுமையாகக் கேட்டார் உரிமையர்.

மறுத்துப் பேசத்துடித்தும், அடக்கி யிருந்தார். சொல்வதை எல்லாம் சொல்லித் தீர்த்தார் வந்தவர். "தேடிவந்தமை எம்பேறு; சொல்வதில் தங்களுக்குள்ள ஆர்வத்தினும் கேட்கும் ஆர்வம் மிக்குளேன்" என்றார்.

கடன் தரவேண்டும் என்பதைத் திட்டமாக அறிந்தும் அழுத்தினார் அல்லர் எங்களுக்குப் பலர் கணக்கு;

தங்களுக்குத் தங்கள் கணக்கே. ஆதலால் தாங்கள் சொல்வதே சரியாய் இருக்கும் என்றார்.

"ஆயினும், உங்கள் கடையில் ஒன்றும் வாங்கேன் என்று பொரிந்தார் வந்தவர்.

"இன்ன இன்ன கடைகளில் தரமாய்ப் பொருள்கள் கிடைக்கும்" என்று பட்டியல் தந்தார் கடை உரிமையர்.

அமைதியானார் வந்தவர்.

'விருந்துணலாமே' என்று விரும்பி அழைத்தார் உரிமையர். ஏற்றுக்கொண்டு விருந்தும் உண்டார்.

திரும்பும் போது எண்ணியதன் மேலும் பெரும் பொருட் கட்டளை தந்தார்.

மறுநாள் கணக்குக் குறிப்பைப் புரட்டிப் பார்க்கக் கடன் தொகை கணக்கும் இருந்தது.

விதிர்விதிர்த்துப் போனார்.