உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 வயதுப் பெண்.

30.

செத்துவிட்டாள் என்று உறுதி செய்து மருத்துவ மனையின் பிணக்கிடங்குள்ளே வைக்கப்பட்டாள்.

பிணத்தைத்தேடி ஓர் உயிர்ப்பிணம் நடையிட்டது!

புத்தம் புதிதாய் வந்து சேர்ந்த அந்தச் செத்த பிணத்தைச் சாவாப்பிணம் தேடிக் கண்டது.

நாற்றம் இல்லை; நல்ல தோற்றம்; இனிய உடற்கட்டு; "இந்த வாய்ப்பை இழக்கலாமா?" என எண்ணியது பிணத்தைக் கண்ட உயிர்ப் பிணம்!

பிணத்தை வாகாய் வைத்துப் புணர்ந்தது!

புணரும் போதில் விந்தை ஒன்று நிகழ்ந்தது.

செத்த பிணத்தின் கண்கள் திறந்தன; கதுமென எழுந்து அலறியடித்து ஓட்டமெடுத்தது சாவாப்பிணம்!

விழித்துக் கொண்ட செத்தபிணமும் வெளியே சென்று வீட்டை அடைந்தது.

செத்தவள் பிழைத்ததை எண்ணிப் பெற்றவரும் பிறரும்-

அப்பிணம் பிழைத்துவந்த பெருமையில்-பிழையைப் பற்றி எண்ணவே இல்லை! பிழைக்கச் செய்த அப்பெருமகன் நன்றே வாழ்கெனத் தன்னை மறந்த குடியில் இருந்த தந்தை வாழ்த்தினான். தாயோ, இன்பக் கண்ணீர் கொட்டினாள்

இறந்த மகள் பிழைத்து வந்தாள் அல்லளோ'!

இந்தச் செய்தி (உ)ருமேனிய நாட்டில் புகாரெட்டு நகரில் நிகழ்ந்ததாம்!

முன்னும் இப்படி வெறியால் நிகழ்ந்த கொடுமையை வள்ளுவக் கிழவர் கண்டவர் வழியே கேட்டும் இருப்பாரோ?