உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

66

-

இளங்குமரனார் தமிழ்வளம் 39

அழிவு செய்யும் சோம்பலைத் தன்னிடத்துக் கொண்டு செயலற்றுக் கிடக்கும் அறிவிலி பிறந்த குடி, அவன் அழியும் முன்னரே அழிந்து விடும்" என்றும் (603)

"சோம்பல் ஒருவன் குடும்பத்தில் நிலை பெறத் தங்கினால், அது அவன் குடும்பத்தோடு பகைவர்க்கு அடிமைப்படுமாறு செய்து விடும்!" என்றும் (608)

குடியை ஆளுந்தன்மையில் உண்டாகிய குற்றம் அக்குடி யில் பிறந்த ஒருவன் சோம்பலின்றி உழைத்தலால் நீங்கும்' என்றும் (609) எச்சரிக்கையும் நம்பிக்கையும் உரைக்கிறார்.

குடும்ப ஆக்கம் கருதுவார் அடுத்த வேளை அடுத்த நாள் என்று கூடத் தள்ளிப் போடாமலும் சோம்பல் இல்லாமலும் மானம் கருதாமலும் கூட ஈடுபட்டு வீறும் வெற்றியும் காட்ட வேண்டும் என்பதை,

"குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும்

என்கிறார்.

(1028)

குடும்ப நலத்திற்குச் சோம்பல் எப்படி ஆகாக் குணமோ, அப்படியே குடும்பத்துள் பார்க்கும் மானமும் ஆகாக் குணமாகும்.

பெற்றோர் உடன்பிறந்தோர் துணை மக்கள் என்பாருள் ஓரொருகால் பெருமைக்குக் குறையாம் சொற்களோ செயல் களோ உண்டாகி விடக் கூடும். அவற்றை மானக் கேடாகக் கருதி எதிரியிட்டு நிற்றலாலும், செயல்படலாலும் குடும்ப அழிவை உண்டாக்கலும், குடும்ப மானம் போக்கலும் கூடாதனவாம். குடும்ப மானம் காத்தற்காகத் தன் மானம் பேணாது கடமை புரிதலும் வேண்டும் என்பது வள்ளுவம். இதனைக் கருதின் குடும்பநலச் சிக்கல்கள் பலவும் இல்லையாய் ஒழியும். இன்னும்,

“குடிசெய்வல் என்னும் ஒருவர்க்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்”

என்னும் வள்ளுவ வாய்மை பெரும் ஊக்குதல் உடையதாம்.

வீழ்ந்துள்ள

தளர்ந்துள்ள தாழ்ந்துள்ள என் குடி உயரும் வகையில் யான் கடமை புரிவேன் என்னும் துணிவுடன் ஒருவன் கிளர்ந்தால் அவன் முயற்சியைக் கண்டு மகிழும் ஆன்றோரும் சான்றோரும் பண்பரும் அறிவரும் பயன்