உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

பிடித்துப் பேசி விடாதவாறு தந்திரமாக வீரன் அழைத்துக் கொண்டு போய் விட்டானே! பிறகு கண்டு பிடிப்பது எப்படி?

பேரையும் ஊரையும் கேட்டும் சொல்லாத அவ்வள்ளலின் அருங்குணம் புலவர்களைக் கவர்ந்தது. எப்படியும் தெரிந்துவிட ஆசை கொண்டனர். நமக்கு மட்டும் அவ்வாசை இல்லையா?

நான்கு காசு கொடுத்துவிட்டு அதனை நான்கு இடங்களிலே எழுதி வைக்கும் 'வள்ளல்கள்' மிகுந்த இக்காலத்திலே, பேரும் ஊரும் சொல்லாமல் பெருங் கொடை புரிந்த செயல் வியப்புக் குரியதல்லவா! கேட்டும் கொடுக்காதோர் பலர்; கேட்டுக் கொடுப்போர் சிலர்; கேளாமல் கொடுப்போர் மிகச்சிலர். பேரும் ஊரும் சொல்லாமலும், கேளாமலும் கொடுப்போர் அரியர் மிக அரியர்! அரிய செயல் செய்த அவ்வள்ளலின் பெயரை அறிய, புலவர் வழிகளிலெல்லாம் கேட்டுக் கேட்டுச் சலித்தனர்; வாயும் அலுத்தனர்.

அவன்.

ஒருவன் சொன்னான்.

"தோட்டி மலைத் தலைவனான கண்டீரக் கோப் பெருநள்ளி

வள்ளல் நள்ளி! நீ வாழ்க" என்று புலவர்கள், வாழ்த்திக் கொண்டு அவன் தந்த பொருளால் இன்பமாக வாழ்ந்தனர். நள்ளியின் கொடை பயன் கருதாக் கொடை! மழை போன்ற கொடை

"கைமாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்(டு) என்னாற்றுங் கொல்லோ உலகு."