உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

ஆண்டு பின் யாருக்கு இவ்வாட்சியைக் கொடுப்பார்! பிறந்தவர் யாவரும் நிலையாய் இருந்துவிட முடியாதே! அப்படிச் சமயத்தில் வேறொருவரிடம் நாட்டை ஒப்படைப்பாயா? அது அறம் ஆகுமா? அன்றி உன் குடிக்கு ஏற்ற தகுதிக்குத்தான் பொருந்துமா? உன் மக்களோ, மற்றவர்களோ ஏற்றுக் கொண்டு அமைதியாக இருப்பார்களா? இது நிற்க.

"நீ ஒரு வேளை இவர்களிடம் தோற்றுவிட்டால் அய்யோ.. அவ்விழிவை பழிநிலையை - என்னால் நினைக்கவும் முடிய வில்லை. தலைகாட்டாது திரியும் பகைவர்களும் நிமிர்ந்து இகழ்ந்து

நடப்பார்களே! எள்ளி நகையாடுவார்களே!

உரைப்பார்களே! இவற்றை எண்ணினால் உனக்கு என்ன தோன்றுகின்றது? போரை விடுவது அன்றிப் புகழ்வழி யாதேனும் உண்டோ? மண்ணுலகப் புகழும் விண்ணுலகப் புகழும் எய்த ஒரே ஒரு வழி போர் விடுப்பதே!" என்றார்.

சோழன் நல்லதே நினைந்து, நல்லதே செய்பவன் அல்லவா! உணர்ச்சியால் வழிதவறிச் சென்றாலும் உயர்ந்த பெரியோர் உரையை முடிமேற் கொண்டு ஒழுகுபவன். ஆதலால் பெருமையும் நன்மையும் தாராத போரை நிறுத்தினான். இன்றும் புகழுடன் வாழ்கிறான். அச்சோழன் பெயரென்ன? கோப்பெருஞ்சோழன் என்பது அவர் பெயர்! ஆனால் மக்களென அறிகிறோமே அன்றி அவர்கள் பெயரும் அறியோம்!

“என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு

நன்றி பயவா வினை”

(புகழும் நன்மையும் தராத செயல்களை எக்காலத்தும் நீக்கி விடுதல் வேண்டும்!)