உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வழிநடை

33

நிலைமையை எண்ணிப் பார்த்த காவலனுக்குத் தாங்க முடியா இழிவாகத் தெரிந்தது. மானங்கெட வாழ்ந்து பழகியவர்களுக்கு இயல்பாகிப் போகியிருக்கும்; சிறிதும் தவறாது வாழ்ந்த அந்த அரசச் செம்மலுக்கு முடியவில்லை.

முன்னமே உயிரைப் போக்கிக் கொள்ளாது, நாய் போல விலங்கிடப் பெற்றுப் பகைவன் சிறைக் கோட்டத்துள் இருக்க நேர்ந்த இழிவை நினைத்தான்; இவ்விழிவினையும் தாங்கி 'நீர் வேண்டும்' என்று கேட்ட நீங்காப் பழியை நினைத்தான்; மதிப்பின்றித் தந்த தண்ணீரைப் பெற்ற மாபெருந் தவற்றை நினைத்தான் ஆ! ஆ! மானம் இழந்தேன்! என மயங்கினான்; மருண்டான்; இனியும் வாழ்வது இழிவு என முடிவு செய்தான்! என்ன செய்தான்? மானம் என்னும் வாள், உயிராம் மரத்தை வெட்ட வீழ்ந்தான்! இப்படி மானம் பேணுபவர் யார்? மானம் போற்றிய மன்னவன் என்று இந்த இரண்டு ஆயிரம் ஆண்டுகளாகச் சேரன் கணைக்காலிரும் பொறையைச் சொல்லி வருகின்றோம்! மானத்தின் சிறப்பையும் அருமையையும் இது காட்டாதா?

“இடுக்கட் படினும் இனிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர்."

(அசைவிலா அறிவை உடையவர் எத்தனைய துயர்க்கு ஆட்பட்டாலும் இழிவான செயல் செய்யார்).