உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பொருள்

243

ஒள்வாள் அமலை:

வாளேந்திய தும்பை மறவர்கள் போரிற் பட்ட பகை யரசனைச் சூழ்ந்து நின்று அவனது திறம் வியந்து ஆடியது ஒள்வாள் அமலை என்னும் துறையாம்.

(எ.டு)

66

'வாளை பிறழுங் கயங்கடுப்ப வந்தடையார் ஆளமர் வென்றி அடுகளத்துத்- தோள்பெயராக் காய்ந்தடு துப்பிற் கழல் மறவர் ஆடினார் வேந்தொடு வெள்வாள் விதிர்த்து.

ஓம்படை :

அறிவன் அரசன் முன்னே நின்று இன்ன செயலைச் செய்தல் நினக்குத் தகுதியாம் என்று நன்மையின் பால் மன்னனை ஒப்பு வித்தல் ஓம்படை என்னும் துறையாம்.

(எ.டு)

66

ஒன்றில் இரண்டாய்ந்து மூன்றடக்கி நான்கினால் வென்று களங்கொண்ட வேல்வேந்தே-சென்றுலாம் ஆழ்கடல்சூழ் வையகத்துள் ஐந்துவென் றாறகற்றி ஏழ்கடிந்து இன்புற் றிரு.

கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்:

மூன்று திருக்கண்களையுடைய இறைவனது தழுவுகையை விரும்பின மானிட மகளிரின் காம மிகுதியைச் சொல்லியது, கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம் என்னும் துறையாம்.

(எ.டு)

“அரிகொண்ட கண்சிவப்ப அல்லினென் ஆகம் புரிகொண்ட நூல் வடுவாப் புல்லி-வரிவண்டு பண்ணலங் கூட்டுண்ணும் பனிமலர்ப் பாசூரென் உண்ணலங் கூட்டுண்டான் ஊர்.

கடவுள் மாட்டுக் கடவுட் பெண்டிர் நயந்த பக்கம்:

இமைக்காத கண்களையும் விளங்கும் அணிகலன்களையும் உடைய தெய்வ மகளிர் கடவுளை விரும்பியது கடவுள் மாட்டுக் கடவுட் பெண்டிர் நயந்த பக்கம் என்னும் துறையாம்.