உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. யாப்பு

அகத்திணைக்குரிய செய்யுட்கள்

நாடக வழக்கிடத்தும், உலகியல் வழக்கிடத்தும் உள்ள அகப் பொருட் கருத்துகளாகிய கைக்கிளை முதலாகப் பெருந் திணை இறுதியாக அமைத்துக் கூறுபவைகளைக் கலி பரிபாடல் என்னும் இரண்டு பாவகைகளினும் கூறுதல் சிறப்புடைத்து. வற்றுள் நாடக வழக்காவது சுவைபட வருவனவெல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல். உலகியல் வழக்காவது உலகத்தாருடைய ஒழுகலாற்றோடு ஒத்துக் கூறுவது. பாடல் சான்ற புலனெறி வழக்கமாவது இவ்விரு வகையானும் பாடல் சான்ற கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுதியாகக் கூறப்படுகின்ற அகப்பொருளாகும்.

அகப்பா வகவல்

அகப் பொருளைத் தழுவி, பத்து உறுப்பினைப் பெற்று, வஞ்சி விரவாது வந்து முடியும் ஆசிரியப்பா அகப்பா வகவலாகும். அகவலுரிச்சீர் - ஈரசைச்சீர்

தேமா, புளிமா, கருவிளம், கூவிளம்

அகவலோசை

இது ஆசிரியப் பாவிற்குரியது. ஆசிரியத் தளையால் ஏற்படும் ஓசை இது. இவ்வோசை ஏந்திசை அகவலோசை, தூங்கிசை அகவலோசை. ஒழுகிசை அகவலோசை என மூவகைப் படும். நேரொன்றாசிரியத் தளையான் வரும் ஆசியப்பா ஏந்திசை அகவலோசையைப் பெறும். நிரையொன்றாசிரியத் தளையான் வரும் ஆசிரியப்பா தூங்கிசை யகவலோசையைப் பெறும். நேரொன்றாசிரியத்தளையும் நிரையொன்றாசிரியத்தளையும் விரவிவந்த ஆசிரியப்பா ஒழுகிசை யகவலோசையைப் பெறும்.