உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிமுரண் தொடை

யாப்பு

353

அடிதோறும் சொல்லும் பொருளும் வேறுபடத் தொடுப்பது அடிமுரண் தொடையாகும். அது சொல்லும் சொல்லும் முரணுதலும், பொருளும் பொருளும் முரணுதலும், சொல்லும் பொருளும் சொல்லொடு முரணுதலும், சொல்லும் பொருளும் பொருளொடு முரணுதலும்,

சொல்லும் பொருளுஞ் சொல்லொடும் பொருளொடு முரணுதலும் என ஐவகைப்படும்.

எடு:-

"இருள்பரந் தன்ன மாநீர் மருங்கில்

நிலவுக்குவித் தன்ன வெண்மண லொருசிறை”

அடிமோனைத் தொடை

அடிதோறும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது அடி

மோனைத் தொடையாகும்.

எடு:-

"மாவும் புள்ளும் வதிவயிற் படர

மாநீர் விரிந்த பூவுங் கூம்ப

மாலை தொடுத்த கோதையுங்கமழ

மாலை வந்தவாடை

மாயோள் இன்னு யிர்ப்புறத் தன்றே"

அடியளபெடைத் தொடை

அடிதோறும் முதற்கண்ணே அளபெடுத் தொன்றிவரத் தொடுப்பது அடியளபெடைத் தொடையாகும்.

எடு:-

66

ஆஅ வளிய வலவன்றன் பார்ப்பினோ

டீஇ ரிரையுங்கொண் டீரளைப் பள்ளியுள் தூஉந் திரையலைப்பத் துஞ்சா திறைவன்றோள் மேஎ வலைப்பட்ட நம்போல் நறுநுதால்

ஓஒ உழக்குந் துயர்.

அடியளவு வரையறை இல்லாத பாக்களின் வகை

கலிவெண்பா கைக்கிளைப் பொருளைப் பற்றிய பாடல். செவியுறை வாழ்த்து, வாயுறை வாழ்த்து, புறநிலை வாழ்த்து