உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு

415

விளக்குநிலை

வேலும் வேற்றலையும் வேறுபடா தோங்கியவாறு போலக் கோலொடு விளக்கு மொன்று பட்டோங்குமா றோங்குவதாகப் பாடுவது விளக்கு நிலையாகும்.

வெண்கலிப்பா

கலிப்பாவின்

உறுப்புக்களாகிய

தாழிசை

அராகம்

அம்போதரங்கம், தனிச் சொல், சுரிதகம்முதலியவைகளைப் பெறாமல் தரவு ஒன்றையே பெற்று வெண்பாவைப் போல் ஈற்றடி சிந்தடியாகவும், ஏனையடி அளவடியாகவும், அமைய கலித்தளைகளை மிகுதியாகப் பெற்று, துள்ளலோசை குறை யாமல் வேற்றுத்தளைகளும் கலந்துவர, நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளுள் ஒன்றினை இறுதியில் பெற்று, துள்ள லோசை யுடைத்தாய் அமைவது வெண்கலிப்பாவாகும். இப்பா நான்கடிகள் முதல் பலவடிகளைப் பெற்று நடக்கும்.

எ.டு:-

66

'வாளார்ந்த மழைத்தடங்கண் வனமுலைமேல் வம்பனுங்கக் கோளார்ந்த பூணாகங் குழைபுரளக் கோட்டெருத்தின் மாலைதாழ் கூந்தலார் வரன்முறையால் வந்தேத்தச் சோலைதாழ் பிண்டிக்கீழ்ச் சூழ்ந்தவர்தஞ் சொன்முறையான் மனையறமுந் துறவறமு மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் வினையறுக்கும் வகைதெரிந்து வீடொடுகட் டிவையுரத்த தொன்மைசால் மிகுகுணத்தெந் துறவரசைத் தொழுதேத்த நன்மைசால் வீடெய்து மாறு.

இது தன் தளையானும் துள்ள லோசையானும் வந்த வெண்கலிப்பா.

66

'ஏர்மலர் நறுங்கோதை யெடுத்தலைப்ப விறைஞ்சித்தண் வார்மலர்த் தடங்கண்ணார் வலைப்பட்டு வருந்தியவென் தார்வரை யகன்மார்பன் றனிமையை யறியுங்கொல் சீர்மலி கொடியிடை சிறந்து.”

இது ஆசிரியத்தளையானும் தன் தளையானும் வந்த வெண்கலிப்பா.

வெட்சிமாலை

மாவீரன் பகைவரூர்க்குப்போய்ப் பசு நிரை கவர்ந்து வருவதை மிகுத்துக் கூறுவது வெட்சிமாலையாகும்.