உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

433

சத்துவமென்பன - வெண்பளிங்கிற் செந்நூல் கோத்தால் அதன் செம்மை புறத்தே தோன்றுமாறுபோல உள்ளங்கருதியது புலனாக்குங்குணங்கள்; அக்குணங்களானவை, சொற்றளர்வு, மெய்வியர்ப்பு, கண்ணீர் நிகழ்ச்சி, மெய்விதிர்ப்பு, மெய் விதும்பல், மெய்ம்மயிரரும்பல் முதலியன.

எடு :-

66

'கல்லுயர்தோட் கிள்ளி பரிதொழுது கண்பனிசேர்

மெல்லியலார் தோழியர்முன் வேறொன்று - சொல்லுவரால்

பொங்கும் படைபரப்ப மீதெழுந்த பூந்துகள்சேர்ந்

தெங்கண் கலுழ்ந்தனவா லென்று.

இலேசவணி (இ)

ஒன்றனைப் புகழ்ந்தாற் போலப் பழித்துக் கூறுதலும், பழித் தாற்போலப் புகழ்ந்து கூறுதலும் ஆகிய இவ்விரண்டும் இலேச வணியின் பாற்படும்.

எடு :-

“மேய கலவி விளைபொழுது நம்மெல்லன்

சாய றளராமற் றாங்குமால் - சேயிழாய்!

போர்வேட்ட மேன்மைப் புகழாளன் யாம்விரும்பித்

தார்வேட்ட தோள்விடலை தான்”

இதில், புணர்ச்சிக் காலத்து அறிவழியா மையாற் பழிப் பாயிற்று.

66

ஆடன் மயிலியலி யன்ப னணியாகம்

கூடுங்கான் மெல்லென் குறிப்பறியான் - ஊடல்

இளிவந்த செய்கை யிரவாளன் யார்க்கும்

விளிவந்த வேட்கை யிலன்

புணர்ச்சிக் காலத்து அறிவு அழிந்தமையாற் புகழாயிற்று.

இறையணி

வினாவிற்கு விடையிறுக்குங்காலத்து அவ்விடையில் ஓர் உட்கருத்து வரத்தொடுப்பது இறையணியாகும். (இறை - விடை.) எடு :-

வழிக்கொண் மன்ன சிலைமய மாகுமிவ்

வுழிச்சிற் றூரிலொ ருவரு மில்லையால்