உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

475

தனுள், நான்முகன் மீகானாகவும், சுரநதி பாயாகவும், அரிதிருத்தாள் கூம்பாகவும் உருவகஞ் செய்யப் புவி நாவாயாக உருவகிக்கப்பட்டமை காண்க.

சிறப்புப் புனைவிலி புகழ்ச்சி

இது புனைவிலி புகழ்ச்சியணி வகைகளுள் ஒன்று. உவமான மாகிய சிறப்புப் பொருளால் உவமேயமாகிய பொதுப்பொருள் தோன்றுதலாம்.

எடு :-

"மன்னு மிருகமதைத் தாங்கு மதிகளங்கன்

என்னு பெயர்கொண் டிழிவுற்றான் - பன்மிருகக் கூட்டங்கொல் சீயமிடல் கொண்மிருக ராசனெனப் பீட்டினொடு கொண்டதொரு பேர்.

இதில், கொடியவன் புகழடையான், மெல்லியன் புகழை யடைவாளென்கிற பொதுப் பொருள் தோன்றச் சிறப்புப்

பொருள் சொல்லப்பட்டது.

சிறுமையணி

வந்து தங்கும் பொருளிலும் அது வந்து தங்கும் இடம் சிறியது என்று சொல்லுவது சிறுமையணியாம். இதனை

வடநூலார் ‘அல்பாலங்கார' மென்பர்.

எடு :

“விரலாழி கைவளையாய் விட்டதினி ஆர்த்து வரலாழிக் கென்செயுமெம் மாது.

சுவையணி

99

உள்ளே நிகழ்ந்த தன்மை நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோராற்றான் வெளிப்பட வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், உருத்திரம், நகை, சாந்தம் என்னும் ஒன்பது வகை மெய்ப்பாடுகளும் அமையப் பாடுவது

சுவையணியாகும்.

எடு :-

"சேர்ந்த புறவி னிறைதன் றிருமேனி

ஈர்ந்திட் டுயர்துலைநா வேறினான் - நேர்ந்த