உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

இளங்குமரனார் தமிழ்வளம் - 40 இன்னவாறெல்லாம் வாழ்த்து வகை உரையும் பாட்டுமாய்

உருக்கொண்டு விளக்கமுற்றன.

"படைத்தோன்' 'கூற்றுவன்' கருத்துக்களும் எழுந்தன. இவ்வளவு பெருக்கமாக இறைமையுணர்வும், வழிபாடும் உண்டாகிய நிலையிலும் “இம்மண்ணின் நலமே நாம் எண்ணத்தக்க ஒன்று; அதில் எம் தனிச்சார்பு, எம் குடிமைச்சார்பு, எம் ஆசான் சார்பு. எம் சூழல் சார்பு என்பற்றுக்கு அடிமைப்பட்டு, வருங்கால நலத்தைப் பாழடித்து விடுதல் ஆகாது' என வள்ளுவப் பெருந்தகை உள்ளூற ஆய்ந்தார்! அழுந்தினார்! ஆழ்ந்தார்! எண்ணி எண்ணித் திண்ணியதோர் முடிவினை மேற்கொண்டார்.

புத்த நெறி இம்மண்ணின் வரவாக அமைந்தது!

அருக நெறியும் அவ்வாறே இம் மண்ணுக்கு வரவாயிற்று! வேத நெறியும் வந்து புகுந்தது! வலுவாகப் புகுத்தவும்பட்டது. இந்நெறிகளை அப்படி அப்படியே கொள்வது இம்மண்ணின் மணத்தோடு கூடியவை ஆகா! இம்மண்ணுக்கு ஏற்ற வகையில் - ஏற்றமாக அமையும் வகையில் "எம் நூல் இயற்றப்படுதல் வேண்டும் எம் மெய்யுணர்வு இதுவே; இதன் பிழிவே,

66

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய்'

""

(359)

என்பது" எனத் தேர்ந்தார் திருவள்ளுவர். அந் நோக்குப் பிறழாமல் கடவுள் வாழ்த்து முதலாக ஊடலுவகை இறுதியாக நூலை இயற்றி முடித்தார்.

ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இறைவன், பொறிவாயில், ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் என்னும் பெயர்கள் கொண்டு எக்கடவுளரேனும் சொல்லப் பட்டுள்ளனரா? அப் பெயரால் வழிபடப்பட்டுள்ளனரா? சிவபெருமானுக்கும், திருமாலுக்கும், புத்தனுக்கும் அருகனுக்கும், கிறித்துவுக்கும் வள்ளுவக் கடவுள் வாழ்த்தைப் பொருந்திக் காட்டினார். இட்டுக் கட்டலும், ஒட்டுக் கட்டலும் அன்றி, வள்ளுவர் கூறிய பெயரே அத் தெய்வப்பெயராய் அவர் காலத்திற்கு முற்பட வழங்கப்பட்டதா? அவர் காலத்திற்குப் பிற்பட நிகண்டு நூல் தொகுத்த பெயர்களுள் பத்தொடு பதினொன்றாக இடம் பெற்றதன்றி அப்பெயர்களே பெயர்களாய் அமைந்த இறைமை ஏதேனும் உண்டா?