உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளில் ஒப்புரிமை

269

"தீர்வு இல்லையே என்று தெரிந்தும் நொந்தும் நல்லோர் கண்ணீர் வடிக்கும் நிலைமையுண்டாயின் அக்கண்ணீரே படைக்கருவியாக இருந்து அவ்வரசை அழிக்கும்” என்றும் ஆணையிடுகிறார்.

'இல்லையே' என்று இரவாமையை உரமாகக் கொண்டு உழைத்து வாழும் உயர்வைப் பாராட்டுகிறார்.

அப்படிப்பட்ட நிலையிலும் பிறர் உதவி தேவைப்படும் வறியர்க்கும் தக்கோர்க்கும் உதவாதார் செல்வம் பாழ்ச் செல்வம் எனப் பழிக்கிறார்.

“அத்தகையரைக் கரும்பை ஆட்டிச் சாறு எடுப்பது போல் எடுக்க வேண்டும்” என்கிறார். “அரசு வருவாய்க்குரிய வழிகளைக் கண்டு அதனால் பொருள் சேர்த்து, தக்க வழிகளில் செலவிடத் தூண்டுகிறார். அதற்கு மாறாக மக்களை வருத்தியும் வாட்டியும், அரசு பொருள் கொள்வது வழிப்பறிக் கொள்ளையர்க்கு ஒப்பு என்று பழிக்கிறார்.

விருந்தோம்பல் என்னும் வேளாண்மை வீடுதோறும் வேண்டும் என விரும்பும் வள்ளுவர், பெருஞ்செல்வர்கள் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் தேவை என்பதை வலியுறுத்து கிறார்.

இவ்வாறு மேடு பள்ளம், குண்டு குழி என்னும் நிலப்பாங்கு போல் பொருட்பாங்கு இருப்பதைப் பண்படுத்திப் பயனாக்கு தலை வேளாண்மைச் செயலுடன் ஒப்பிட்டுக் காட்டுகிறார்.

நிலத்தில் பயிரிடுவோர் முதற்கண் பண்படுத்துவர். பண்படுத்துதலில் முதன்மையானது நிலத்தை ஒப்புரவு செய்தல்.

மலைப்பாங்கு, மலைச்சரிவு, மேட்டு நிலம், வள நிலம் எதுவாயினும் நிலம் ஒப்புரவாக்கப்பட்டு அவ்வொப்புரவுக்கு வரம்பமைத்து வைத்தால் தான் பயிரிட உதவும்.

நிலம் மேடும் பள்ளமுமாக இருப்பின் மேட்டில் ஊன்றிய வித்தும் நாற்றும் அழுகிப் போய் அழியும்.

ஒப்புரவு நிலமாக இருந்தால்தான் பயிர்கள் ஒப்ப வளர்ந்து உரிய பயனைத் தரும்.

இவ்வியல்பைக்,

காட்டிச் செல்வம் குவியாமலும் குறையாமலும் இருக்க வழிகாட்டும் முகத்தான். ஒப்புரவறிதல் என்பதைக் கூறுகிறார். அறிதல் பெயரால் அவையறிதல், இடன்