உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

சிறந்த மூளையர், கடிய உழைப்பர், காலந்தவறாதவர், கடமையே கண்ணானவர் என்பாரையும்; பொறுப்பிலார், விருப்பிலார், சோம்பர், முரணர் என்பாரையும் ஒத்த இயல்பராக எண்ணியும் நடத்தியும் தகுதியறியாதும் தரமும், திறமும், போற்றாதும் தலைமை இருக்குமானால், “இங்கே உழைப் பார்க்கும் - கடன் கழிப்பார்க்கும் வேறுபாடு இல்லை; ஆதலால், நாம் பொறுப்பாக உழைத்து என்னபயன் கண்டோம்?” என்று எண்ணி உழைத்தவரும் உழையாமல் ஒழிதற்கே இடமாகிவிடும்.

ஆதலால், வரிசையறிதலும், பாராட்டலும், பரிசு வழங்குதலும் இன்றியமையாதவையாம். எனவே,

“பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர்”

என்கிறார்.

அந்நாள் ஆட்சித் தலைமையர் அளவாளவுதல், வரிசை யறிதல் என்பவற்றைக் கண்ணாகக் கருதினர் என்பது புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றால் நன்கு விளங்குகின்றன.

வேந்தர் நிலையில் செம்மமாந்து நின்றாரும் அளவளாவு தலில் தலை நின்றனர் என்பது 'பெருஞ்சோற்று உடனிலை' என்னும் புறந்துறையால் புலப்படும். படைவீரர் ஒவ்வொரு வர்க்கும் தாமே முன்னின்று படைப்பதுடன், தாமே படைத்தும் தழுவி இன்புற்றும் பாராட்டியும் செய்த பெருநிகழ்ச்சியே பெருஞ் சோற்று உடனிலையாகும். அவ்வகையில் பாராட்டுப் பெற்ற படைஞர், தம் வேந்தரின் நன்றிக் கடனாகத் தம் அரிய உயிரையும் படையலிடும் நெறியைக் கொண்டமை ஆங்காங்கு அறியக் கிடக்கின்றன. இதனால் உள்ளொத்த உறவுக்கு அளவளாவுதல் கட்டாயம் வேண்டும் என்பதாலேயே,

66

"அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று”

என்றார் வள்ளுவர்.

கரை இல்லாக் குளத்திற்கு நீர் வந்து என்ன, வராது போயின் என்ன? நீர்தான் நில்லாதே! அளவளாவுதல் இல்லானிடமும் எவரும் நில்லார் என்பதைக் குறித்தார்.

சங்கப் புலவர் ஒருவர் வேந்தன் ஒருவனை நோக்கி,