உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

இளங்குமரனார் தமிழ்வளம்

5

எங்களையும் கட்டுப்படுத்தி அடக்கி ஒடுக்கப் பார்க்கிறார். நாங்கள் இன்பமாக வாழ்வது, நண்பர்களுடன் உறவாடுவது அவருக்குப் பிடிக்கவில்லை. நாங்கள் வாழ்வது எங்களுக்காகவே! அவருக்காகவா? உரிமையை இழவோம்! ஒருநாளும் இழவோம்! இது உறுதி” இது மன்னவன் மக்களின் மாண்புக் குரல்!

66

'ஆமாம்! ஆமாம்!" இது ஒத்து ஊதுவோரின் தலை யாட்டச் சொல்! அடிப்படைத் திட்டம் உருவாகியது. என்ன திட்டம்? வேந்தனை ஒழிப்பது; ஆட்சியைப் பறிப்பது. 'ஆள என்ன திறமை இல்லையா எங்களுக்கு? மீனுக்கு நீச்சலும், குருவிக்குப் பறத்தலும், முயலுக்குத் தாவலும் படித்துக் கொடுத்தோ வரவேண்டும்? பார்த்துக் கொள்கிறோம். ஆள எங்களுக்குத் தெரியும்; வாழவும் எங்களுக்குத் தெரியும். மன்னர் ஆராய்ச்சியை அவரோடு நெருங்கிப் பழகும் புலவர்களிடமே வைத்துக்கொள்ளட்டும்" இது ஒருமித்த முடிவு. முடிவுப்படி

செயலாற்றத் தொடங்கினர்.

பதவிக்காகப் பலர் நெருங்கினர்; பணத்திற்காகப் பலர் நாடினர்; சிந்தனை அற்றுச் செருக்கித் திரிந்த வீரர்கள் துணைக்கு நின்றனர். அனைவரும் யாரும் அறியாதவாறு ஓர் இடத்தே கூடினர்.

மன்னன் மைந்தன் ஒருவன் எழுந்தான். “மன்னர் ஆட்சியை ஒப்படைக்கமாட்டார், எங்களையும் உரிமை வாழ்வு வாழ விடமாட்டார். இந் நிலைமையில் என்ன செய்வது? து எங்களை நோக்கியுள்ள சிக்கல்” என்றான்.

66

·

கட்டளை ளை என்ன ஆனாலும் சரி! கண்ணை இமைத்து மூடுமுன் செய்தே முடிப்போம். உங்கள் சோற்றை உண்ட உடல் உங்களுக்கு உழைத்தே தீரும்” - இப்படித் துள்ளினான் சிறுமை யின் பெருநிலையிலே நின்ற ஒருவன். ஆமாம் ஆமாம் என்று கூத்தாடினர் அவனை ஒத்தவர்கள்!

66

'வீரர்களே! ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். அன்புக்குக் கட்டுப்படமாட்டார் அரசர். அறிவுரைக்கும் செவி சாய்க்க மாட்டார். அப்படி ஏலாதவர்களாக நின்று கையேந்தி எங்கள் உரிமைகளைப் பெறவும் விருப்பமில்லை. சந்திக்க வேண்டும் களத்திலே! காட்ட வேண்டும் கைவரிசையை! அந்தக் கிழப்புலி என்னதான் செய்கின்றது என்று பார்க்கலாம்” இது மன்னர் மைந்தருள் மற்றொருவன் திருவாக்கு!

-