உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இளங்குமரனார் தமிழ்வளம்

5

உள்ளேயே உள்ளனர்! உங்கள் நாட்டுப்பற்றை நாட்டுங்கள்! வீரத்தை வெளிப்படுத்துங்கள்! வீரனுக்குச் சாவு ஒருமுறை! கோழைகளுக்குச் சாவு கோடி முறை! நரிக் கூட்டத்தை ஊளை யிட விட்டுவிட்டு அரிக்கூட்டம் அமைந்து கிடக்குமா? பூனைக் கூட்டம் போருக்கு எழுவதைப் பார்த்துவிட்டுப் புலிக்கூட்டம் ஓய்ந்து கிடக்குமா? எலிப்படை அப்படை! புலிப்படை நம்படை! எழட்டும் போருக்கு! விழட்டும் களப்பலி! பெறுவோம் வெற்றி! உறுவோம் புகழ்

திரண்டது படை! சந்தித்தது கோழியூர் வெளியிலே; அலைபோன்ற அணி வகுப்புகள். தந்தை ஒரு பக்கம்; மைந்தர் மற்றொரு பக்கம். நாட்டு மக்களோ இரு பக்கங்களிலும்! என்ன கொடுமை!

வீட்டுப்போர் நாட்டுப் போராக வளர்ந்து விட்டது. சூழ்நிலை வளர்த்துவிட்டது. இனிப் போர்க்காற்று அடிக்க வேண்டியதுதான். சூறைக்காற்றிலே பனம் பழம் விழுவது போல வீரர் தலைகள் விழும். எப்பக்கம் விழ்ந்தால் என்ன? சாவது சோழரே!

போர் நிகழ்ச்சி அறிஞர்களைத் தட்டி எழுப்பியது. ஆன்றோர்களைத் தூண்டியது. “போரை நிறுத்த முனையுங்கள்; முயற்சி செய்யுங்கள்” என்றது உள்ளம். புலவர் ஒருவர் துணிந்தார். எழுந்தார்; ஏனையோர் வாழ்த்தி அனுப்பினர், போர் நீக்கப்போன புலவர் பெயர் புல்லாற்றூர் எயிற்றியனார் என்பது.

படைக்கடல் இடையே ஓடிவந்தார் புலவர். போர் முழக்கம் செய்துவிட்டு இருவரும் பொர வேண்டிய நேரம். எனினும் புலவரை மதித்து நடக்கும் புரவலனாம் சோழன் புலவர் வருகை கண்டு படை வீரர்களைக் கையமைத்துவிட்டுப் புலவரை வரவேற்றான். புலவர் நடுங்கிய உள்ளத்துடனும் பதை பதைப்புடனும் இருப்பதை அவர் தோற்றம் காட்டியது. வியர்வை வடியும் நெற்றி அவர் வந்த விரைவைப் புலப்படுத்தியது அரசன் கையைப் பற்றிக்கொண்டு களத்திற்கு வெளியே வந்தார்.

L

புலவர் வருகையும், அரசர் செலவும் படைகளுக்குத் திகைப்பூட்டின. அரசன் ஆணையை எதிர்நோக்கிக்கொண்டு அமைதியாகினர். எதிர்ப்பக்கத்தில் முழக்கம் மிகுதிப்பட்டது. பதில் முழக்கம் இல்லாமையால் அதனை எதிர்நோக்கிக் கொண்டு நின்றனர். போர்க்கு என ஒரு நெறி உண்டு அல்லவா! அது போர் தொடுக்காது இருக்குமாறு செய்தது.