உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றுக் கதைகள்

99

“பிள்ளை பெற்றுவிட்டு இவ்விடம் வருக என்று என்னைத் தடுத்து நிறுத்திய அன்பில்லாதவனே! இதோ.... வந்துள்ளேன். எனக்கென எவ்விடத்தை ஒதுக்கி வைத்துள்ளாய் கூறு” என்று கேட்டார். ார். தம் கண்களை மூடிக் மூடிக்கொண்டு சிந்தனையிலே ஆழ்ந்தார். சோழன் உருவம் மனக்கண்ணில் தோன்றியது. ஏதோ ஓர் இடத்தைச் சுட்டிக் காட்டுவதாகவும் உணர்ந்தார். அவ் விடத்தே உட்கார்ந்தார். அப்பொழுது அவர் அடைந்த வியப்புக்கு அளவு இல்லை!

“உடம்பும் உயிரும் இணைந்தது போன்ற உயரிய நட் புடையவர்கள் எந்நிலைமை அடைந்தால்தான் என்ன? தம் பழைய நட்பினை மறப்பரோ? ஆண்ட பெருமகன் மாண்டு கல்லானான். எனினும் இடங் கொடுத்து உதவினான். பழமை யான நட்புடையாரிடம் சென்றால் எது தான் கிட்டாது” என்று சோழனே நினைவாக உயிர் நீத்தார் பொத்தியார்!

ஊர்

-

-

-

அம்மம்ம! சோழன் கொண்ட சிறப்புத்தான் என்னே! அவனொடும் வடக்கிருந்து உயிர் நீத்தவர்கள் எத்தகையர்? மாண்புமிக்க மனைவி - அத்தன்மைமிக்க மக்கள் - கருத்தறிந்து ஏவல் செய்யும் பணியாள் உயர்ந்தோர், சான்றோர் வாழும் செங்கோல் தவறா மன்னன் இத்தகையவர்களை ஒருங்கே கொண்டு இனிது வாழ்ந்த பிசிராந்தையார்! நிழல் அகன்றாலும் அகலலாம்; அந்நிழலினும் பிரியாத பேரன்புடைய இளம் மனைவி - குடிக்கு ஒருவனாய் அன்று பிறந்த அருமை மைந்தன் - இவர்களை உடைய பொத்தியார்!

இவர்கள் வடக்கிருக்கத் துணிந்தது ஏன்? இதுஅல்லவோ உயிர் நட்பு!