உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

இளங்குமரனார் தமிழ்வளம்

5

பரண்மீது இருந்த புலி பாய்ந்து இறங்கியது. புள்ளிமான் போல் துள்ளி ஓடியது பூனைக்குட்டியின் கால்களைப் பிடிப்பது போல் பிடித்தது. போர்; கடும்போர்; மங்கைப் புலிக்கும் மறப்புலிக்கும் தாழாப்போர்; வலசாரி இடசாரிப் பாய்ச்சல்; தாவுதல்; தாக்குதல்; மோதுதல் எல்லாம். எத்தகைய குறைவும் இல்லாப்போர்; கொடுத்து வைக்க வேண்டும் பார்க்க!

வென்றது எது? மறப்புலிபட்ட பாட்டையும், இழு பறியையும் அதுதானே அறிந்திருக்கும். தாடையிலே குத்தித் தரையிலே உருட்டிவிட்டு வெற்றிக் களிப்பிலே ஒரே தாண்டில் ஏறிக் கொண்டாள் பரண்மீது. பிறகும் வெற்றி யாருக்கென்று சொல்லவேண்டுமா?

பரணில் ஏறிக்கொண்ட பின்தான் பார்த்தாள். தான் ஏணி வழி ஏறி வரவில்லை என்று மறப்புலியைத் தாக்க மங்கைப் புலிபோன துடிப்பைப் பார்த்துவிட்டுப் பரணின் கீழே கூர்ந்து நோக்கிக் கொண்டு நின்றான் வரிப்புலி. இமைத்த கண் மூடாமல் நோக்கிக்கொண்டே நின்ற அவன் தன்னை மறந்துவிட்டான்.

வளைந்து குனிந்து நின்ற தான் தான் ஏணியாக இருந்தது என்பதை அவனே அறிந்துகொள்ள முடியாத போது வீரமங்கை அறியாமல் இருந்ததில் வியப்பு இல்லைதானே! அவள் அறிந்து கொண்ட பின்னர் பாவம்! செவ்வானம் போல முகம் நாணத்தால் சிவந்துவிட்டது.

-

-

வரிப்புலி பரணைவிட்டு நடந்தான். எப்படி? அடி ஒன்று வைக்க அரை நாழிகை தேவைப் படும்போல் இருந்தது. ஒரு பார்வை மறப்புலி மீது! மற்றொரு பார்வை மங்கைப்புலி மீது! என்ன செய்வான் சிறிது தொலைவு மனமில்லாமலே நடந்தான்.

இனிய இசைக்குரல் ஒன்று தென்றலிலே மிதந்து வந்தது. அது இசையா? இன்ப வெள்ளம்; தேன்மாரி; தெய்வக் கனிச் சாறு. ஆ! ஆ! வரிப்புலி மேலும் நடந்தானா? நடந்தான். திரும்பியபடியே பரணுக்கு!

மங்கைப் புலி பரணிலே; வரிப்புலி பரணின் கீழே; ஆனால் போர் இல்லை! அமைதி குடி கொண்டது! ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் நோக்கினர். தலை நிமிரும் ஒரு பக்கம்; தலை தாழும் மற்றொரு பக்கம். தெய்வ அன்பு புகுந்து விட்டது. பேச்சும் வேண்டுமா?

வருந்திப் பிரிந்தான்; பழைய தொலைவு கூடப் போக வில்லை. “புலி புலி" என்று ஒரு குரல் எழுந்தது. அது வீரமங்கை