புறநானூற்றுக் கதைகள்
105
சோற்றைப் படைத்தனர். “வளம் பெருகுக; வாழ்வு பொங்குக. என்று தெய்வத்திற்குப் பூவும் படையலும் இட்டு வாழ்த்தினர். உற்றார் உறவினர் சூழ இருந்து உண்டனர். அப்பொழுது வீரமங்கை மட்டும் உணவிலே கருத்து வைக்காது கருமுகில்மேல் திகழ்ந்து கொண்டிருந்த வெண்ணிலாவை இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“என்ன வீரமங்கை சாப்பிடவில்லையா?' என்றான் வேங்கை மறவன். “சாப்பிட்டேன் சாப்பிட்டேன்” என்று வாய் மட்டும் பேசியது. உள்ளம் எங்கோ போயிருந்தது.
ஒரு நாள் வேங்கை மறவனைத் தேடி ஒரு கிழவன் வந்தான். நரைத்த தலை; கூனிய முதுகு; ஆனால் வலிய உடலுடைய ய அவன் கன்னத்தில் முதுமைக் கோடுகள் தெரியவில்லை. ஆண் சிங்கம் போல நடந்து வந்தான். வேங்கை மறவனோ மிகக் கருத்தாக அம்புகளைக் கூர்மையாக்கிக் கொண்டிருந்தான்.
வந்த கிழவன் நின்றுகொண்டு இருந்தான், மறவன் நிமிர்ந்து பார்க்கவில்லை. அம்பைத் தீட்டுவதிலேயே முனைந் திருந்தான். பளபளப்பு ஏறும்வரை தீட்டினான். கை நகத்தில் தேய்த்துத் தேய்த்துப் பதம் பார்த்துக் கொண்டே மேலும் மேலும் தீட்டினான். அவன் செயல் திறத்தை அம்பு தீட்டும் அக்கறையே காட்டியது.
66
“ஐயா” என்றான் நின்ற கிழவன். “யார்? வாருங்கள்!” என்று கொண்டே நிமிர்ந்து பார்த்தான் வேங்கை மறவன். மறவன் கண்களிலே வீரம் விளையாடுவது கிழவனுக்குத் தெரிந்தது. அம்பினை ஒதுக்கி வைத்துவிட்டு அருகிலிருந்த மரப்பலகையைக் காட்டினான் உட்காருமாறு. கிழவன் உட்கார்ந்தான். மறவன் பேசினான்.
"என்னைத்தான் தேடி வந்தீர்களா? நீங்கள் யாரைப் பார்க்க வேண்டும்'
66
“வேறு
و,
எவரையும் அல்ல உங்களைத்தான் பார்க்க வந்தேன்” - கிழவன் உரைத்தான்.
66
.
“அப்படியா மகிழ்ச்சி! நீங்கள்...” என்று பேச்சை இழுத் தான் மறவன். அவன் விருப்பத்தை அறிந்துகொண்ட கிழவன் "நான் அரிக் குடியைச் சேர்ந்தவன்; நம்பி என்பது என்பெயர்" என்றான். “நல்லது வீட்டுக்குப் போகலாம் வாருங்கள்” என்று எழுந்தான் மறவன்.